அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சென்னை காவல் ஆணையர் மாற்றம்!

Posted : புதன்கிழமை,   ஜுலை   01 , 2020  07:15:46 IST

 சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் ஐபிஎஸ் மாற்றப்பட்டு மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு பல்வேறு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை பணிமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளது. மகளிருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவின் ஏடிஜிபி ஆக இருந்த டாக்டர் ரவி ஐபிஎஸ், தமிழக அதிரடிப்படை ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர் கண்ணன் ஐபிஎஸ் ( உள்நாட்டு பாதுகாப்பு டிஐஜி), சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். இன்னும் பல முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

பிற அதிகாரிகள் மாறுதல்கள் பின்வருமாறு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரிய டிஜிபியாக இருந்த சுனில்குமார் மாநில மனித உரிமைகள் ஆணைய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார்.

திருச்சி ஐ.ஜியாக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு புதிய ஐ.ஜியாக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரேமானந்த் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி காவல் ஆணையராக இருந்த வரதராஜூ மாற்றப்பட்டு தஞ்சை டி.ஐ.ஜி., லோகநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் நகர காவல் ஆணையராக ஜி. கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டு உளளார்.

 பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக கணேச மூர்த்தி நியமிக்கப்பட்டார்.

சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த அருண் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். சென்னை காவல் துறை தலைமையக கூடுதல் ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் நகர காவல் ஆணையராக இருந்த சஞ்சய் குமார் சென்னை தொழில்நுட்ப ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல் வடக்கு மண்டல இணை ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...