???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   19 , 2019  22:49:29 IST

மாநில மனித உரிமைகள் ஆணைய டிஜிபி உள்ளிட்ட 11 காவல் துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் டிஜிபி-யாக உள்ள காந்திராஜன், தீயணைப்பு மற்றும் மீட்புப்படைகள் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஊழல் தடுப்பு டிஜிபி-யாக உள்ள ஸ்ரீலட்சுமி பிரசாத், மாநில மனித உரிமைகள் ஆணைய டிஜிபி-யாக மாற்றப்பட்டுள்ளார்.
 
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி-யாக உள்ள அபய்குமார் சிங், கரூரில் உள்ள காகித ஆலையின் தலைமை ஊழல் தடுப்பு அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஊமஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் அகாடமியின் ஐ.ஜி-யாக உள்ள பாஸ்கரன், திருநெல்வேலி நகர ஆணையராகவும், அந்தப் பதவியில் உள்ள மகேந்திரகுமார் ரத்தோடு, தமிழ்நாடு காவல் அகாடமியின் டிஐஜி-யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிவோரை மாற்ற வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த 11 அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...