???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.பி.எல் தொடர் 2018: கோப்பையை வென்ற சென்னை ’சீனியர் கிங்ஸ்’!

Posted : திங்கட்கிழமை,   மே   28 , 2018  04:20:35 IST


Andhimazhai Image

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறை “சாம்பியன்” பட்டம் வென்றது.

 

ஆட்டம் முடிந்ததும் ஹர்ஷா போக்ளே டிவீட் செய்தது இதுதான். ’’ஷேன் வாட்சனுக்கு முதல் பத்து பந்துகளில் ரன் எடுக்கமுடியாமல் செய்யுங்கள். பின்னர்…’’  அவர் சொன்னது நேற்று ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு புரியும். பார்க்காதவர்கள் நேற்றைய ஆட்டத்தின் மறு ஒளிபரப்பை கண்டு புரிந்துகொள்ளுங்கள். நேற்றைய ஆட்டத்தில் அதிரடி சதம் விளாசி ஹைதராபாத் இதயங்களை நொறுக்கிய ஷேன் வாட்சனுக்கு 37 வயதாகிறது. கிரிக்கெட்டில் இது ஓய்வு பெறும் வயது. ஆனால் ஷேன் வாட்சன் கிரிக்கெட்டின் ’நீலாம்பரி’. வயது கூடக்கூட நளினமும் வசீகரமும் கூடிக்கொண்டே போகிறது வாட்சனின் ஆட்டத் திறனுக்கு.  

 

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இறுதிஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் ’தல’ டோனி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின்  ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். விக்கெட் கீப்பர் கோஸ்வாமி 5(5) ரன்கள் எடுத்து தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். பின்னர் ஷிகர் தவானுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன் விகிதத்தை உயர்த்தினார்கள். இந்நிலையில் தவான் 26(25) ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் போல்ட் ஆனார். சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த கேப்டன் வில்லியம்சன் 47(36) ரன்கள் எடுத்திருந்த போது கரண் சர்மா பந்தில் அவுட் ஆகி, அரை சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவற விட்டார். அப்போது அணியின் ஸ்கோர் 101-3.

 

அடுத்ததாக ஷகிப் அல்-ஹசனுடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார். ஷகிப் அல்-ஹசன் 23(15) ரன்களும், அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 3(4) ரன்களும் எடுத்து அவுட் ஆனார். அதிரடி ஆல்ரவுண்டர்  பிராத்வெய்ட் 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் 45(25) ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். அணி சிறப்பான ஸ்கோரை எட்ட பதானின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. சென்னை அணியின் சார்பில் ஷர்துல் தாகூர், நிகிடி,கரண் சர்மா, பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.

 

179 ரன்கள் வெற்றி  இலக்குடன், சென்னை அணியின்  ஷேன் வாட்சன் மற்றும் டுப் பிளிஸ்சிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கடந்த குவாலிஃபையர் ஆட்டத்தில் அதிரடி காட்டிய டு பிளிஸ்சிஸ் 10(11) ரன்களில் சந்தீப் சர்மா பந்தில் அவுட் ஆனார். அடுத்ததாக ஷேன் வாட்சனுடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தியது. ஆரம்பத்தில் சற்று நிதானம் காட்டிய வாட்சன் பின்னர் அதிரடி ஆட்டத்தின் மூலம் அரை சதம் விளாசினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரெய்னா 32(24) ரன்களில் பிராத்வெய்ட் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.அப்போது அணியின் ஸ்கோர் 133-2.  

 

வாட்சனுடன் அம்பத்தி ராயுடு ஜோடி சேர்ந்தார். பின்னர் அதிரடியாக ஆடிய ஷேன் வாட்சன் 51 பந்துகளில் சதம் விளாசினார். ஆட்டநேர முடிவில் ஷேன் வாட்சன் 117(57) ரன்களும்,  அம்பத்தி ராயுடு 16(19) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுளை இழந்து 181 ரன்கள் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஐதராபாத் அணியின் சார்பில் சந்தீப் சர்மா, பிராத்வெய்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சிறப்பாகப் பந்து வீசினாலும் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை ரஷீத் கான். அநேகமாக அவர் விக்கெட் வீழ்த்தாத ஒரு சில ஐ.பி.எல் போட்டிகளில் நேற்றைய இறுதிப் போட்டியும் ஒன்றாக இருக்கக் கூடும்.

 

 

இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி ரூ.20 கோடி பரிசுத்தொகையை பெற்றது. 37 வயதான ஷேன் வாட்சன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். சூதாட்டப் புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாகப் கோப்பையை  வென்று அசத்தி உள்ளது.

 

ஐ.பி.எல் போட்டிக்கான ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் முப்பது வயதைக் கடந்தவர்கள். இதனால் சமூக வலைதளங்களில் ’சீனியர் கிங்ஸ்’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சீண்டி விளையாடினார்கள் நெட்டிசன்கள். சீனியர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றபோது அவர்களுக்கு பதில் சொன்னவிதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ’தல’ டோனி சொன்னதுதான் ஹைலைட்.  ‘சென்னை அணி வீரர்களின் வயது குறித்து பலரும் விமர்சித்தனர். ஆனால், சாதிக்க வயது முக்கியமல்ல, உடற்தகுதி தான் முக்கியம் என்பதை தற்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.’click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...