???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கிரிக்கெட்டையே ஆண்டவர் டோனி!

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   26 , 2018  04:26:20 IST


Andhimazhai Image
ஐ.பி.எல். திருவிழா நாளுக்கு நாள் களைகட்டத் தொடங்கிவிட்டது. ஐ.பி.எல் தொடரின் 24 வது ஆட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்பில் சென்னை அணியும் ஆறாம் இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி முதல் நான்கு இடத்திற்கான முன்னேறும் முனைப்பிலும் ஆட்டத்தை எதிர்கொண்டன. கடந்த போட்டியில் வெளுத்து வாங்கிய டி வில்லியர்ஸ் சரியான நேரத்தில் பார்ஃமுக்கு திரும்பியுள்ளது பெங்களூரு அணிக்கு ப்ளஸ் என்றாலும் சென்னை வீரர்களின் அதிரடியின் முன் டி வில்லியர்ஸ் ஆட்டம் மறக்கப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில். 
 
 
முதலில் டாஸ் வென்ற டோனி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குவிண்டின் டி காக், கேப்டன் விராட் கோலி சிறப்பாக தொடங்கினாலும் கோலி நிலைத்து ஆடவில்லை. 18 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
 
 
அடுத்து களமிறங்கிய ஆல் டைமன்ஷன் அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ்-டி காக் ஜோடி சென்னையின் பந்து வீச்சை சிதற அடித்தார்கள். பவர் ஃப்ளேவில் 5.5 ஓவர்களில் பெங்களூரு அணி 50 ரன்கள் குவித்தது. அதன்பிறகு டி வில்லியர்ஸ் தன் அபாரமான பேட்டிங்கால் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருக்கு ஈடு கொடுத்து டி காக் அவுட் ஆகாமல் விளையாடி வந்தார். இந்த ஜோடி 64 பந்துகளில் 100 ரன்கள் குவித்தது. 23 பந்துகளில் டி வில்லியர்சும், 32 பந்துகளில் டி காக்கும் அடுத்தடுத்து அரை சதம் விளாசினார்கள்.   இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தார்கள். டி காக் பிராவோ பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 53 ரன்கள்[1X4,4X6]  எடுத்தார். பின்னர் சிறப்பாக அதிரடி காட்டி வந்த டி வில்லியர்சை இம்ரான் தாஹிர் அவுட் ஆக்கினார். டி வில்லியர்ஸ் 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் இரண்டு பவுண்டரிகளும் எட்டு சிக்சர்களும் அடங்கும்.
 
 
அடுத்து கோரே ஆண்டர்சன் இரண்டு ரன்களில் வெளியேற பின்னர் களமிறங்கிய மந்தீப் சிங் தன் அதிரடி ஆட்டத்தால் 17 பந்துகளில் 32 ரன்கள் [1X4,3X6]  குவித்தார். கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் நான்கு பந்துகளில் 13 ரன்கள் குவிக்க பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.
 
 
டி 20போட்டியில் இது ஒரு கடினமான ஸ்கோர்தான் என்பதில் சந்தேகமில்லை. சென்னை அணியின் இம்ரான் தாஹிர் இரண்டு விக்கெட்டுக்களும், பிராவோ இரண்டு விக்கெட்டுக்களும், அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் ஷர்துல் தாகூர் இரண்டு விக்கெட்டுக்களும், வீழ்த்தினார்கள்.
 
 
இரண்டாவதாகக் களமிறங்கிய சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 7 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து ஆடவந்த சுரேஷ் ரெய்னாவும் சோபிக்கவில்லை. அவர் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் அம்பதி ராயுடு அதிரடி காட்டினாலும் சாம் பில்லிங்ஸ், ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். இதனால் ஒரு கட்டத்தில் சென்னை அணி 74ரன்களுக்கு 4 நான்கு விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
 
 
இந்நிலையில்தான் களமிறங்கினார் சென்னையின் தல டோனி. டோனியும் அம்பதி ராயுடுவும் பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் சற்று பொறுமை காத்தார் டோனி. அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடினார். ஸ்கோர் மளமளவென உயர ஆரம்பித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு டோனியும் ராயுடுவும் 101 ரன்கள் குவித்தார்கள். பதினாறாவது ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 151 ரன்களைக் கடந்தது. சிறப்பாக விளையாடிவந்த ராயுடுவை உமேஷ் யாதவ் ரன் அவுட் ஆக்கினார். ராயுடு 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இதில் மூன்று பவுண்டரிகளும் எட்டு சிக்சர்களும் அடங்கும். ராயுடு அவுட் ஆகும்போது சென்னையின் ஸ்கோர் 175. வெற்றிக்கு 13 பந்துகளில் 30 ரன்கள் தேவை.
 
 
இதன் பின்னர் நடந்தது தான் உட்பட்ச கிளைமாக்ஸ். பத்தொன்தாவது ஓவரை முஹம்மது சிராஜ் வீசினார். மூன்று வைட்கள், ஒரு சிக்ஸ் உட்பட அந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை. டோனியும் எதிர்முனையில் இன்னொரு அடங்காப்பிடாரி அதிரடி பிரோவோவும். முதல் பந்தில் சிக்ஸரும், அடுத்து ஒரு பவுண்டரியும், சிங்கில்ஸும் எடுத்தார் பிராவோ. நான்காவது பந்தை இடது பக்கம் ஒரு அடி எடுத்து வைத்து, சிக்சருக்குத் தூக்கிவிட்டு கம்பீரமாக நடந்துவந்தார் தல டோனி. இரண்டு பந்துகள் மீதம் உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 207 ரன்கள் குவித்து ஐபிஎல்-லில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற்றது.
 
 
வெற்றிக்கு பின்பான செய்தியாளர் சந்திப்பில் டோனி, களத்தில் இருப்பவர், அடுத்து யார் பந்து வீசுவார்கள், யார் யாருக்கு எவ்வளவு ஓவர் மீதம் உள்ளது என்ற கணக்கை அறிந்திருப்பது அவசியம் என்றார். இந்த ஆட்டம் பற்றிய நுணுக்கம்தான் டோனியை மிகச் சிறந்த வெற்றியாளராகவும் கேப்டன் கூல் ஆகவும் உயரத்தில் வைத்திருக்கிறது!
 
 
டோனியின் அதிரடியை அடுத்து அவரது ரசிகர்களில் ஒருவர் போட்ட மீம்.. கொஞ்சம் ஓவராக இருந்தாலும் சிரிக்க வைத்தது! கிரிக்கெட்டின் ஆண்டவர் சச்சின்! கிரிக்கெட்டையே ஆண்டவர் டோனி!
 
 
- சரோ லாமா -


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...