???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு 0 அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம்! 0 ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு 0 இன்ஸ்டாகிராமில் 3 கோடி பின் தொடர்பவர்களைப் பெற்ற பிரதமர் மோடி! 0 கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு ஜனவரியில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 குப்பை அள்ளி மோடி விளம்பரம் தேடுகிறார்: திருநாவுக்கரசர் விமர்சனம் 0 சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க: காங்கிரஸ் மனு 0 மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்தவரைப் பிடிக்க களம் இறங்கிய 100 போலீஸ்! 0 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு: உலக வங்கி அறிக்கை 0 கோவையில் திருநங்கை போல் வேடமணிந்து வழிபறி செய்தவர்கள் கைது! 0 ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ.கூட ஆக முடியாது: முதலமைச்சர் 0 இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் 0 தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 0 அமித்ஷாவை விமர்சித்த வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன்! 0 மேலும் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.பி.எல் கவுண்ட் டவுன் – 6 – வார்னரின் இழப்பை ஈடு செய்வாரா வில்லியம்சன்?

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   07 , 2018  06:54:48 IST


Andhimazhai Image

ஐ.பி.எல் தொடரில் 6-வது முறையாக களமிறங்குகிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள டேவிட் வார்னருக்குப் பதில், நியூஸிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். மற்ற ஏழு அணிகளுக்கும் இந்திய வீரர்கள் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்கள். இந்த வருடம் ஐ.பி.எல் தொடரில் விளையாடும் அணிகளில் இந்தியர் அல்லாத கேப்டன் வில்லியம்சன் மட்டுமே. கடந்த 2016 சீசனில் கோப்பையை வென்ற, இதுவரை மூன்று சதங்களும் 4014 ரன்களும்[ 142.14] குவித்த டேவிட் வார்னருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பேற்றுள்ள வில்லியம்சனின் ஆட்டம் மற்றும் அணியை வழிநடத்தும் திறனைக் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.  

 

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான அணி வீரர்களைக் கொண்டுள்ளது ஹைதராபாத். ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள். வில்லியம்சன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் 20 பந்தில் சதம் விளாசியிருந்த விர்த்மன் சாஹா ஆகியோர் மிடில் ஆர்டரில் விளையாடுவார்கள். இவர்கள் எல்லோருமே அதிரடியாக ஆடக்கூடியவர்கள் என்பது சிறப்பு. கடந்த 2014ம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடிய யூசுப் பதான், 15 பந்தில் அரைசதம் அடித்தார். ஐ.பி.எல். வரலாற்றில் விரைவாக அடிக்கப்பட்ட அரைசதம் இதுவேயாகும். மணீஷ் பாண்டேவை 11கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கும் அணி நிர்வாகத்துக்கு அவர் தன் அதிரடியால் பதில் சொல்லத்தான் வேண்டும் இல்லையா?   

 

பந்து வீச்சில் மிகுந்த பலம்மிக்க அணியாகத்தான் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர், புவனேஷ்குமார், ஐபிஎல்லில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திவரும் பசில் தம்பி, கடந்த ஐபிஎல் சீசனில் பத்து போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்திய சித்தார்த் கௌல் ஆகியோர் சிறப்பானதொரு பங்களிப்பை செய்வார்கள். சுழற்பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர்கள் ரஷீத் கான், முகம்மது நபி ஆகியோரும், அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டர்கள் கார்லோஸ் ப்ராத்வைட், ஷாகிப் அல் ஹசனும் மிரட்டக் காத்திருக்கிறார்கள்.

அணியின் பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாம் மூடி. கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கும் டாம் மூடியின் அனுபவம் மெச்சத்தகுந்த ஒன்றுதான். இவரது வழிகாட்டுதலில் ஹைதராபத் அணி இதுவரை மூன்று முறை ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது. அணியின் ஆலோசகர் வி.வி.எஸ்.லட்சுமணும், பந்து வீச்சு பயிற்சியாளர் முரளிதரனும் அணித்தேர்விலும் பயிற்சி முறைகளிலும் இதுவரை சிறந்த பங்களிப்பை செய்துள்ளார்கள் என்றே உறுதியாகச் சொல்ல முடியும். 2016ஆம் ஆண்டு கோப்பையை வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மேஜிக் மீண்டும் நிகழுமா? வார்னரின் இடத்தை கச்சிதமாக நிரப்புவரா கேன் வில்லியம்சன்? பார்க்கலாம்.

 

[கவுண்ட் டவுன் தொடரும்..]



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...