???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.பி.எல் கவுண்ட் டவுன் - 4: மும்பை இந்தியன்ஸின் வெற்றிப் பயணம் தொடருமா?

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   04 , 2018  07:55:34 IST


Andhimazhai Image

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பற்றி பேசுவதற்கு முன் நாம் அந்த அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியைப் பற்றிக் கொஞ்சம் பேசிவிடலாம். ஏனெனில் ஐ.பி.எல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கதையும், அனந்த் அம்பானியின் கதையும் நமக்கு ஒன்றை கற்றுக்கொடுக்கலாம். அந்த ஒன்று - விடா முயற்சி. 21 வயது அனந்த் அம்பானி பார்க்க நாற்பது வயதுக்காரர் போல் இருப்பார். தனது வயதுக்கு மீறிய குண்டான உடம்பை வைத்துக்கொண்டு பரிதாபமாக அவர் ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் உட்கார்ந்திருக்கும் போது நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அதன் பிறகு கடுமையான உடற்பயிற்சியாலும் உணவுப் பழக்கத்தாலும் தனது எடையை [108 கிலோ] குறைத்தார். அதேபோல்தான் ஐ.பி.எல் தொடரின் ஆரம்பத்தில் சொதப்பிய மும்பை இந்தியன்ஸ் அணி பின்னர் சுதாரித்துக்கொண்டு மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. காரணம் அணியின் விடா முயற்சி. அணி நிர்வாகத்தின் முறையான சீர் திருத்தங்கள். இனி 2018 சீசனில் ஆடவிருக்கும் அணியைப் பற்றிப் பார்ப்போம்.

 

மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி வரும் ரோகித் சர்மா, சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த வருட ஐ.பி.ல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ஸ்கோர் அடித்த ரோகித் சர்மா (333 ரன்), கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து 300 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். ரோகித் ஷர்மாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை ஐ.பி.எல் தொடரை வென்றுள்ளது. வேறு எந்த ஐ.பி.எல் அணியும் செய்யாத சாதனை இது. அதுமட்டும் இல்லாமல், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரையும் வென்றுள்ளது.

 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் கெரன் பொல்லார்ட். மும்பை அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான இவர் 2010இல் தான் முதல் முறையாக ஐ.பி.ல் தொடரில் மும்பைக்காக விளையாடத் தொடங்கினார். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஐ.பி.ல் தொடரில் இருந்தே அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும்தான் விளையாடி வருகிறார். 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஐ.பி.ல் தொடரில் 51விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு ஐபில் தொடரில் 17 போட்டிகளில் 385 ரன் அடித்து, மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல துணையாக இருந்தவர் பொல்லார்ட்.

 

ஜஸ்ப்ரிட் பும்ரா. இந்திய அணியின் மித வேகப்பந்து நட்சத்திரம். ஐபிஎல்-லில் இதுவரை 46 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள மும்பை அணியின் இளம் நம்பிக்கை தரும் பந்து வீச்சாளர்.  சர்வதேச டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை மற்றும் ஒருநாள் போட்டிக்கான தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் ஜஸ்ப்ரிட் பும்ரா. 

 

ஹர்திக் பாண்டியா. சாம்பியன்ஸ் டிராபி 2017 தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் அதிவேக அரைசதம் அடித்து அசத்தியவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற ஹர்டிக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கியமான  ஒரு ஆல்-ரவுண்டர்.

 

லசித் மலிங்கா, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மும்பை அணிக்காக இதுவரை 110 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்கள் [149 விக்கெட்டுகள்] வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். ஆனால் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்காவை இந்த ஆண்டு மும்பை உட்பட எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மஹேலா ஜெயவர்த்தனே தலைப் பயிற்சியாளராக தொடர்கிறார்.

 

பேட் கம்மின்ஸ், பென் கட்டிங், ஜே.பி. டுமினி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை இஷான் கிஷான், க்ருணால் பாண்ட்யா, அனுகுல் ராய் என இந்திய அணியின் இளம் வீரர்களுடன் களமிறங்கப் போகிறது. நான்காவது முறை கோப்பையை வென்று அசத்துவாரா ரோஹித் ஷர்மா? பார்க்கலாம்.

 

[கவுண்ட் டவுன் தொடரும்..]



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...