???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை 0 ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் 0 கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் 0 வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! 0 பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு 0 கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி! 0 கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம்! 0 கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார்! 0 ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் 0 அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் 0 கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு 0 கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு 0 கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை! 0 கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.பி.எல் கவுண்ட் டவுன் -3 : முதல்முறை கோப்பையை வெல்வாரா விராட் கோலி?

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   03 , 2018  08:05:26 IST


Andhimazhai Image

விராட் கோலி. இந்திய அணியின் கேப்டன். ரன் மிஷின். ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்காக 9000 ரன்கள் குவித்தவர். ஐ.பி.எல், டி20 போட்டிகளில்  கடந்த 2016ஆம் வருடம் கோலி சிறப்பாக விளையாடி 16 போட்டிகளில் நான்கு சதங்கள் உட்பட 973 ரன்கள் குவித்தார்.[ சராசரி: 81.00. ]  கோலியின் அதிரடியால்தான் பெங்களூரு 2016ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எனலாம். ஆனால்  சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியிடம் இறுதிப்போட்டியில் தோற்றது. விராட் கோலி, கிரிஸ் கெய்ல் அதிரடியில் பெங்களூரு கோப்பையை வென்றுவிடும் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு வந்த டிவில்லியர்ஸ், ஷேன் வாட்சன் முதலிய முன்னணி வீரர்கள் பரிதாபமாக சொதப்பினார்கள். ஒரு கட்டத்தில் 140-2 என நல்ல நிலையில் இருந்த பெங்களூரு அணி அடுத்து அறுபது ரன்களை சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுக்களை இழந்து எட்டு ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை நழுவவிட்டது. இதுதான் பெங்களூரு அணி. அணியில் பல நல்ல முன்னணி வீரர்கள் இருந்தாலும் அது இதுவரை கோப்பையை வென்றது இல்லை. 

 

இதுவரை மூன்று முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ள பெங்களூரு ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. ஐந்து முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய இந்த அணி, டிவில்லியர்ஸ், கிரிஸ் கெய்ஸ், விராட் கோலி, ஷேன் வாட்சன் என பல முன்னணி வீரர்களைக் கொண்டிருந்தாலும் ஐ.பி.எல். வரலாற்றில் கோப்பையை வென்றதில்லை.

 

இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஆன கேரி கிர்ஸ்டன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரை முறையே பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. 2011-ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது தலைமைப் பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிர்ஸ்டன். அவர்தான் தற்போது பெங்களூரு அணியின் ஆலோசகராகவும், பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி தலைமைப் பயிற்சியாளர் பதவியில் நீடிக்கிறார். இது அணியின் பயிற்சியாளர்கள் பற்றிய குறிப்பு. இனி அணியின் இந்த வருட வீரர்களைப் பற்றிப் பார்க்கலாம்.

 

விராட் கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் அணியில் நீடிக்கிறார்கள். நியூஸிலாந்து அதிரடி வீரர் ப்ரெண்டன் மெக்கல்லம், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் க்விண்டின் டி காக், கிரிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ், என அனுபவம் கொண்ட மூத்த வீரர்கள் மற்றும்  மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் சர்ப்ராஸ் கான், யஷ்வேந்திர சாகல், வாஷிங்டன் சுந்தர், மொயின் அலி, பவன் நேகி என திறமையான இளம் வீரர்களின் கலவையாக அந்த அணி உள்ளது. என்னது ஏதோ ஒன்று குறைகிறது என்று சொல்கிறீர்களா? உண்மைதான். கிரிஸ் கெய்ல். பெங்களூரு அணி அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. கடந்த ஏழு வருடங்களாக பெங்களூரு அணிக்கு ஆடிய அவர் இந்த முறை கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணிக்காக ஆடப்போகிறார். கெய்ல் இல்லாதது மிகப் பெரும் பலவீனம்தான். ஆனால் கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம். இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தும் விராட் கோலி இந்த வருடம் பெங்களூரு அணிக்காக கோப்பையை வென்று அசத்துவார் என்று நாம் கட்டாயம் எதிர்பார்க்கலாம். வாழ்த்துகள்.    

 

[கவுண்ட் டவுன் தொடரும்..]



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...