???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு 0 அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம்! 0 ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு 0 இன்ஸ்டாகிராமில் 3 கோடி பின் தொடர்பவர்களைப் பெற்ற பிரதமர் மோடி! 0 கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு ஜனவரியில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 குப்பை அள்ளி மோடி விளம்பரம் தேடுகிறார்: திருநாவுக்கரசர் விமர்சனம் 0 சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க: காங்கிரஸ் மனு 0 மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்தவரைப் பிடிக்க களம் இறங்கிய 100 போலீஸ்! 0 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு: உலக வங்கி அறிக்கை 0 கோவையில் திருநங்கை போல் வேடமணிந்து வழிபறி செய்தவர்கள் கைது! 0 ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ.கூட ஆக முடியாது: முதலமைச்சர் 0 இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் 0 தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 0 அமித்ஷாவை விமர்சித்த வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன்! 0 மேலும் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐபிஎல் கவுண்ட் டவுன்-2 : மீண்டும் சாதிப்பாரா டோனி?

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   02 , 2018  08:12:01 IST


Andhimazhai Image
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டப் புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் களமிறங்குகிறது. ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகம் எதிர்பார்ப்பு உள்ள அணியாக இருப்பதற்கு முக்கியமான காரணம். டோனி. மகேந்திரசிங் டோனி. இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வென்று தந்த ராஞ்சியைச் சேர்ந்த டோனி இப்போது சென்னையில் செல்லப்பிள்ளை.  
 
 
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டோனியின் சாதனை குறிப்பிடத்தக்கது. அதைபோலவே ஐ.பி.எல் கிரிக்கெட்டிலும் அவரது சாதனைகள் முக்கியமானவைதான். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆறு முறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றவர் டோனி. ஐபிஎல் தொடரில் வேறெந்த அணியின் தலைவரும் செய்யாத மிகப்பெரிய சாதனை இது.  டோனி தலைமையில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னையின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சூத்ரதாரி டோனி. காரணம் அவரது தலைமைப் பண்பு. அணியை வழி நடத்தும் லாவகம். அதனால்தான் இதுவரை எல்லா ஆண்டும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.
 
 
இந்த வருடம் பேட்டிங்கில் டோனியைத் தவிர்த்து சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பிராவோ,டூப்ளிசஸ், முரளி விஜய் என நட்சத்திர வீரர்கள் சென்னை அணியில் தொடர்கிறார்கள். இது பெரிய பலம். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன் குவித்த சாதனையை கைவசம் வைத்திருப்பவர் சுரேஷ் ரெய்னா[ 4540 ரன்கள்]. எனவே சென்னை அணி பலம்மிக்க அணியாக தொடரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சென்னையின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மட்டும் இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார். அது பலவீனம் தான் என்றாலும் ஹர்பஜன்- இம்ரான் தாஹீர்- ரவீந்திர ஜடேஜா சுழற்பந்து கூட்டணி அதை ஈடு செய்யும் என்று நம்பலாம்.   
 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி மஞ்சள் நிறம். தமிழகத்துக்கும் மஞ்சள் நிறத்துக்கும் அப்படி ஒரு ’வெற்றி’ ராசி உண்டு. இந்த முறையும் டோனி சென்னை  சூப்பர் கிங்ஸ் அணியை ஏழாவது முறையாக ஃபைனலுக்கு அழைத்துச்செல்வார் என்று நாம் எதிர்பார்க்கலாம். அவ்வளவு பலம் பொருந்திய அணியாகத்தான் சென்னை உள்ளது. அப்படி ஃபைனலுக்கு சென்றால் சென்னை மூன்றாவது முறை ஐ.பி.எல் கோப்பையை வெல்லட்டும் என்று வாழ்த்துவோம். விசில் போடு, மீண்டும் திரும்பி வந்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு!
 
 
[கவுண்ட் டவுன் தொடரும்..]


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...