???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐபிஎல் கவுண்ட் டவுன் -1 : ராஜஸ்தான் ராயல்ஸ்

Posted : சனிக்கிழமை,   மார்ச்   31 , 2018  09:36:37 IST


Andhimazhai Image

ந்த ஐ.பி.ல் கிரிக்கெட் தொடர் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தொடங்க இருக்கிறது. ஐபிஎல்-லில் விளையாட இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் களமிறங்க இருக்கின்றன. நாம் முதலில் பார்க்கப் போவது ராஜஸ்தான் ராயஸ் அணியைப்பற்றி.

 

ஐபில் தொடர் என்பது இப்போது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அல்லது பலரும் மறந்துபோய்விட்ட இந்திய கிரிக்கெட் வாரிய முன்னால் துணைத் தலைவர் லலித் மோடியின் ஐடியா. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முதன்முதலில் 2008ல் தொடங்கப்பட்ட போது அதன் வணிக வெற்றியை யாரும் கற்பனை செய்திருக்க வாய்ப்பில்லை. பலநூறு கோடிகள் கொட்டிக்கொடுக்கும் கற்பக விருட்சம் அது. அதை லலித் மோடி உணர்ந்திருந்தார். ஐ.பி.எல்லின் சூத்ரதாரிகளில் ஒருவர் லலித் மோடி என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் அதற்கு முன்பே டி20 கிரிக்கெட் தொடர் என்பதை இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் தொடங்கினார்கள். இரண்டு வருடங்கள் தொடர்ந்து நடந்த அந்தத் தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்கவில்லை. அதன்பிறகு தொடங்கப்பட்டதுதான் இந்தியன் பிரிமியர் லீக்-ஐ.பி.எல்.  

 

ஐபிஎல்-லின் முதல் கோப்பையை யாரும் கணிக்கமுடியாத வண்ணம் கைப்பற்றியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஷேன் வார்னே அணித்தலைவர். சர்வதேச கிரிக்கெட்டில் அப்போது இறங்குமுகத்தில் இருந்த ஷேன் வார்ன் ஃபைனலில் வென்று வெற்றிக்கோப்பையை தூக்கிப்பிடித்தபோது டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஏக்கத்துடன் பார்த்தார்கள். ஏனெனில் அவர்கள் தவறவிட்ட வரலாற்று வாய்ப்பல்லவா அது?

இத்தனைக்கும் சென்னை அணியுடன் ஒப்பிடும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒன்றும் பிரமாதமான அணியில்லைதான். சென்னையில் டோனி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், மாத்யூ ஹெய்டன், ஸ்டீபன் பிளமிங், மைக் ஹஸி என நட்சத்திர வீரர்கள் நிரம்பிய பலம்வாய்ந்த அணியை ராஜஸ்தான் சொல்லி அடித்து கில்லியானது. காரணம் அணியின் டீம் வொர்க். இளம் வீரர்களை வழிநடத்திய வார்னேவின் தலைமைப் பண்பு. விளையாட்டில் தனிநபர் சாதனைகளைவிட அணியின் கூட்டு உழைப்பே வெற்றியைப் பெற்றுத்தரும் என்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டது.

 

ஆனால் அதன்பிறகு நடந்த ஐ.பி.எல் தொடர்களில் ராஜஸ்தான் அணி சொல்லிக்கொள்ளும்படி சோபிக்கவில்லை. ஒரு முறை நிகழ்ந்த அதிசயமாகவே அந்த அணியின் வெற்றி பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் 2016ஆம் ஆண்டு சூதாட்டப்புகாரில் அந்த அணி சிக்கியது. இரண்டு ஆண்டுகள் விளையாட தடை. இப்போது மீண்டும் களமிறங்கும் அந்த அணி இழந்த பெருமையை அடைந்த களங்கத்தை போக்குமா? பொருத்திருந்துதான் நாம் பார்க்கவேண்டும்.

 

இந்த ஆண்டு  ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில்  அஜிங்க்ய ரஹானே, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜாகீர் கான், ஜெயதேவ் உனாட்கட் என நட்சத்திர வீரர்களுடன் களமிறங்க இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆனால் எதிர்பாராத கிளைமாக்சில் ஸ்மித் பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டார். இது மிகப்பெரும் பின்னடைவுதான். எனினும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஜிங்க்யா ரஹானே தலைமையில் களமிறங்கப் போகிறது. ரஹானாவின் படை கோப்பையை வெல்லுமா? பார்க்கலாம்.

 

[கவுண்ட் டவுன் தொடரும்...]



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...