???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு 0 புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் 0 பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 0 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி 0 தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி 0 கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு 0 மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 21- 31] 0 மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் 0 தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் 0 தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் 0 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி 0 தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்: ம.தி.மு.க. தீர்மானம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆறாவது ஐ.பி.எல் சதம் : கெத்து காட்டிய கெயில்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   20 , 2018  02:51:14 IST


Andhimazhai Image

ன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான இரண்டாவது போட்டியில் சதம் விளாசினார் மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் ஹென்றி கெயில். நடப்பு ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கெய்ல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 104 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணகர்த்தாவானார். சர்வதேச இளம் கிரிக்கெட் வீரர்களில் குறிப்பிடத்தக்க பந்து வீச்சாளராக வளர்ந்துவரும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் பந்து வீச்சை சிக்ஸர்கள் மூலம் பதம் பார்த்தார் கெய்ல். ரஷித்கான் இதுவரை ஆடிய 95 டி20 ஆட்டங்களில் 138 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். கடந்த சில வருடங்களாக ஐ.பி.எல்.லில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படும் இளம் வீரர் இவர். நேற்றைய போட்டியில் மட்டும் நான்கு ஓவர்கள் வீசி 55ரன்கள் வாரி வழங்கினார் ரஷித்கான். ஐ.பி.எல்லில் இது இவரது மோசமான பந்து வீச்சு என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஆடிய ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸ், மனீஷ் பாண்டே ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றிக்காக முயற்சித்தும் கடைசியில் தோல்வியைத்தான் சந்தித்தது.

 

இத்தனைக்கும் கெய்லை இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணியும் முதலில் ஏலத்துக்கு எடுக்கவில்லை. இரண்டாவது முறை நடந்த ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சி வழிநடத்துனர் வீரேந்திர சேவாக் கெய்லை ஏலத்தில் எடுத்தார். மோசமான பார்ஃம், வயதாகிவிட்டது என பல காரணங்கள் சொல்லப்பட்டன. பஞ்சாப் அணிக்குள் வந்தாலும் முதல் இரண்டு போட்டிகளில் கெய்ல் விளையாடவில்லை. சென்னையுடனான போட்டியில்தான் அவர் களமிறங்கினார். அந்தப் போட்டியில் 33 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி 197 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் வெற்றி, டோனி எவ்வளவு போராடியும் கைகூடவில்லை. காரணம் கிறிஸ் கெய்லின் ஆரம்ப அதிரடி.

 

கடந்த 2006ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டிதான் கெய்ல் விளையாடிய சர்வதேச டி20 போட்டி. அந்தப் போட்டி சமனில் முடிந்தது. எனினும் கூடுதல் ஓவர் வீசப்பட்டதில் நியூஸிலாந்து வென்றது. அந்தப் போட்டியில் கெய்ஸ் அடித்தது வெறும் பத்து ரன்கள் தான். ஆனால் அதன் பிறகு அவர் டி20 போட்டிகளில் எடுத்தது விஸ்வரூபம். டி20 போட்டிகளின் தவிர்க்க முடியாத உலகநாயகன் என்றுதான் கிறிஸ் கெயிலை அழைக்க வேண்டியிருக்கிறது. இதுவரை தான் ஆடிய  325 டி20 போட்டிகளில் மொத்தம் இருபத்தோரு சதங்கள், 68 அரை சதங்கள் விளாசியுள்ளார் கெய்ல். குறிப்பாக 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் கெய்ல் 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார். இதில் 17 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். இது தனிநபர் ஒருவரின் அதிகபட்ச டி20 ஸ்கோர் ஆகும். டி 20 போட்டிகளில் அதிக சிக்ஸர் [834 சிக்ஸர்கள்] விளாசிய வீரரும் கெய்ல்தான். 

 

மேலும் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், இருபது ஓவர் போட்டியில் சதம் என ரன்கள் குவித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனை கிறிஸ் கெயிலுக்கு உண்டு. டெஸ்ட் அரங்கில் இரண்டு முச்சதம் அடித்த நான்கு வீரர்களில் கெய்லும் ஒருவர்.

 

மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துடன் மோதல், ஆஸ்திரேலியாவில் பெண்கள் சம்பந்தமான சர்ச்சை, மூத்த கிரிக்கெட் வீரர்கள் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் கேரி சோபர்சை விமர்சித்தது என கிறிஸ் கெய்ல் சாதனை நாயகன் மட்டுமல்ல, சர்ச்சைகளின் நாயகனும் கூட.

 

மற்றவர்களின் விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் பதில் சொல்வது ஒரு வகை. அது பெரும்பாலும் சாதாரணர்களும் அரசியல்வாதிகளும் செய்வது. சாதனையாளர்கள் தனது சாதனைகளால் தன் மீதான விமர்சங்களுக்கு பதில் சொல்கிறார்கள். ஐ.பி.எல் ஏலத்தில் தன்னைப் புறக்கணித்த அணிகளுக்கு  கிரிக்கெட் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் தனது அபாரமான சிக்ஸர்களின் மூலம் கிடைத்த சதத்தால் பதில் சொல்லியிருக்கிறார். மேலும் தனது கிரிக்கெட் வாழ்வின் முக்கியமான சதத்தை தனது இரண்டே வயதான [20/4/2016] செல்ல மகளின் பிறந்தநாளுக்கு அவர் அர்ப்பணிக்கவும் செய்தார்.

 

- சரோ லாமா - click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...