???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

2018 ஐ.பி.எல் தொடர்: எதிர்பார்ப்பை வீணடித்த வீரர்கள்!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   30 , 2018  08:01:42 IST


Andhimazhai Image

கடந்த ஏப்ரல் மாதம் ஆராம் தேதி கோலாகலமாய் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 24 நாட்கள் ஆகிவிட்டன. நாளுக்கு நாள் சூடு பிடித்துவரும் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனைய வைத்து விறுவிறுப்பாய் நடந்து வருகிறது. இதுவரை எல்லா அணிகளும் தலா ஏழு ஆட்டங்களில் ஆடி முடித்துள்ளன. இந்த வருடம் புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடத்தில் இருக்கிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். இரண்டாம் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ். மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்தப் பட்டியல் தினந்தோறும் மாறும் என்றாலும் இன்னும் நான்கைந்து நாட்களில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்பது தெரிந்துவிடும். அதற்கு முன் இந்த வருடம் அதிகம் விலைக்கு வாங்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆனால் ஆட்டத்தில் சோபிக்காத வீரர்களைப் பற்றிய ஒரு சுருக்கமான பதிவு இது.  

 

 

 

 

ஜெயதேவ் உனட்கட் [ 11.5 கோடி]

கடந்த வருட ஐ.பி.எல் தொடரில் கடந்த ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபித்ததன் மூலமாக இந்திய அணியிலும் இடம் பிடித்தார் உள்ளூர் போட்டிகளில் சௌராஸ்டிரா அணிக்காக விளையாடிய உனாட்கட். இந்த ஆண்டு இவரை ஏலத்தில் எடுக்கக் கடும் போட்டி நிலவியது. இவருக்காக சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் கடும் போட்டி போட்ட நிலையில் இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 11.5 கோடி ரூபாய் கொடுத்து விலக்கு வாங்கியது. இந்திய பந்துவீச்சாளர்களில் அதிகவிலை கொடுத்து வாங்கப்பட்ட வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் இருக்கின்றார். ஆனால் உனாட்கட் இதுவரையிலான ஆட்டத்தில் சோபிக்கவில்லை என்பதுதான் சோகம். ஏழு ஆட்டங்களில் ஆடியுள்ள இவர் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். எதிரணிக்கு 224 ரன்கள் வாரி வழங்கியுள்ளார். ஒரு ஓவருக்கு சராசரி 10 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இது டி20 கிரிகெட்டில் மோசமான பந்துவீச்சு. இத்தனைக்கும் கடந்த ஆண்டு புனே அணிக்காக விளையாடிய இவர் 12 ஆட்டங்களில் விளையாடி 24 விக்கெட்டுக்களை வீழ்த்தி புனே அணி இறுதி போட்டிக்கு முனேறியதற்கு ஜெயதேவ் உனாட்கட்டும் மிக முக்கிய காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த வருடம் இவர் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது. இனிவரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் அணியைப்போலவே உனாட்கட்டும் சோபிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

பென் ஸ்டோக்ஸ் – 12.5 கோடி

இந்த வருடம் 2018 ஐ.பி.எல் ஏலத்தின் முதல் நாளில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் ரூ.12.5 கோடி விலைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு வைக்கப்பட்ட அடிப்படை விலை 2 கோடி ரூபாய். இவர் கடந்த ஆண்டு ரூ.14.5 கோடிக்கு புனே அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.] கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புனே சூப்பர் ஜெயண்ட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதற்கு பென் ஸ்டோக்ஸ்-ம் ஒரு முக்கியமான காரணம். அவர் 12 ஆட்டங்களில் 316 ரன்கள் குவித்தார். குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிவேக சதமும் [103 ரன்கள் நாட் அவுட்] அடித்தார் ஸ்டோக்ஸ். ஸ்ட்ரைக் ரேட் 143. பந்துவீச்சிலும் குறை வைக்கவில்லை. 12 ஆட்டங்களில் 12 விக்கெட்டுகள் சாய்த்தார். ஆனால் இந்த வருடம் பென் ஸ்டோக்ஸும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட்டை போலவே ஐ.பி.எல்.லில் இதுவரை பிரகாசிக்கவில்லை. இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள ஸ்டோக்ஸ் வெறும் 147 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். பந்து வீச்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இனிவரும் ஆட்டங்களில் பென் ஸ்டோக்ஸ் அதிரடி காட்டும் பட்சத்தில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சாதிப்பாரா பென் ஸ்டோக்ஸ்?

 

ரோஹித் சர்மா: 15 கோடி

 

ரோகித் ஷர்மா மும்பை அணியின் கேப்டன். இரண்டு முறை அந்த அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தவர். இதுவரை ஐபிஎல் தொடரில் 166 ஆட்டங்களில் 4403 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ரன் 109. கடந்த ஐபிஎல் 2015 சீசனில் மும்பை அணி ஆறு ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே வெற்றியைப் பெற்றிருந்தது. அத பின்னர் தொடர்ச்சியா வெற்றிகளைக் குவித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி பைனலில் கோப்பயையும் வென்ரது மும்பை அணி. அந்த ஃபைனலில் அரை சதம் அடித்தார் ரோகித் சர்மா. அந்த தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றார் அவர். மும்பை அணி 2015 சீசனில் ஆரம்பத்தில் இருந்த அதே நிலைமையில்தான் இப்போது உள்ளது. இந்த சீசனில் ஏழு ஆட்டங்களில் இரண்டில் வெற்றி. ஐந்து தோல்வி. காரணம் ரோஹித் சர்மாவின் ஃபார்ம். ஏழு ஆட்டங்களில் 196 ரன்கள் எடுத்துள்ள அவர் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும்தான் நன்றாக விளையாடியுள்ளார். 2015 ஆம் ஆண்டு நடந்த அந்த மேஜிக் மீண்டும் நடக்குமா? ரோகித் சர்மா சாதிப்பாரா? பார்க்கலாம்.

 

மணீஷ் பாண்டே – 11 கோடி

ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் தொடரில் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும் இதுவரையிலான ஆட்டங்களில் பேட்ஸ்மேன்கள் அதிகம் ரன் குவிக்கவில்லை, கேப்டன் கேன் வில்லியம்ஸைத் தவிர. குறிப்பாக மணீஷ் பாண்டே. கடந்த தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்காக ஒரு சாதரண வீரராக விளையாடிய மணிஷ் பாண்டேவிற்கு இந்த வருடம் சிறப்பாக துவங்கியுள்ளது என்றே கூறவேண்டும். தொடர்ச்சியாக இந்திய அணியிலும் இடம்பிடித்து தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள மணிஷ் பாண்டேவை சன் ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி இந்த வருடம் 11 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் மணீஷ் பாண்டே ஆடிய எட்டு ஆட்டங்களில் 158 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடங்கும். ரன் சராசரி 26. பந்து வீச்சின் பலத்தால் ஹைதராபாத் அணி வெற்றிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும் பேட்ஸ்மேன்கள் சோபிக்க வேண்டும். குறிப்பாக மணீஷ் பாண்டே. கடந்த ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மணீஷ் பாண்டே 14 ஆட்டங்களில் 396 ரன்கள் குவித்தார். ரன் சராசரி 49.50. ஐ.பி.எல்.தொடரில்ல் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான மணீஷ் பாண்டே மற்றும் இதர வீரர்களான ஷிகர் தவான், யூசுஃப் பதான் போன்றவர்களும் பார்ஃமுக்குத் திரும்புவது ஹைதராத் அணி இந்த முறை கோப்பையை வெல்ல உறுதுணையாக இருக்கக்கூடும்.

 

ரவிந்திர ஜடேஜா – 7.5 கோடி

 

ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் ஆல் ரவுண்டர். சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் ஒருவர். டோனியின் சகா. இரண்டு வருட தடைக்குப் பிறகு ஆட வந்திருக்கும் சென்னை அணியில் தக்கவைக்கப்பட்ட அணி வீரர்களில் மூவரில் ஒருவர். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் அணிக்கு பலம் சேர்க்கும் இவர் இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை சோபிக்கவில்லை. ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் 47 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவரது ஆட்டம் சென்னை அணியின் வெற்றியை அதிகம் பாதிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சரியான பார்ஃம்மில் இல்லாத இவர் அணியில் நீடிக்க வேண்டுமெனில் தனது பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் சோபிக்க வேண்டும். இவரது ஆல்ரவுண்டர் ஆட்டத்திறன் சென்னைக்கு கூடுதல் பலம். முதல் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த ஜடேஜா அந்த அணியின் கேப்டன் ஷேன் வார்னேவால் ராக் ஸ்டார் என்று புகழப்பட்டார். இனிவரும் போட்டிகளில் தன்னை மீண்டும் நிருபிப்பாரா இந்த ராக் ஸ்டார்?   

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...