???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி?

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   22 , 2019  00:57:14 IST


Andhimazhai Image
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டை முறைகேடாக பெற அனுமதி அளித்தார் என்பது தான் ப.சிதம்பரம் மீதான முக்கிய குற்றச்சாட்டு. இந்த நிறுவனம் மும்பையை சேர்ந்தது.   
 
 
2017ம் ஆண்டு சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது  சிபிஐ ஊழல் வழக்கையும், அமலாக்கப்பரிவு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கையும் பதிவு செய்தன.
 
 
கடந்த 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான  26 சதவீத பங்குகளை விற்க, நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை அணுகினர். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 
 
 
ஆனால்  அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி அணுகியபோது 4.6 கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்க, ப.சிதம்பரம் அனுமதி தந்ததாக கூறப்படுகிறது.
 
 
 
 அந்த உதவிக்கு பதிலாக தனது  மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு பீட்டர் முகர்ஜி உதவ வேண்டும் என சிதம்பரம் கூறியதாக கொலை வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி வாக்குமூலத்தில்  தெரிவித்துள்ளார்.
 
 
இந்நிலையில்   305 கோடி ரூபாய் முதலீட்டை ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ஈர்த்திருந்தது  வருமான வரி சோதனையின் மூலம் தெரியவந்தது.
 
 
இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தை அணுகிய இந்திராணி முகர்ஜி, மூன்றரை கோடி ரூபாயை அவருக்குச் சொந்தமான ''அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக்'' நிறுவனத்தின் கணக்கில் செலுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 
 
இதனிடையே மகள் ஷீனா போராவை கொலை செய்தது தொடர்பாக பீட்டர் முகர்ஜியும், இந்திராணி முகர்ஜியும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.  இந்திராணி முகர்ஜி சிதம்பரம் வழக்கில் அப்ரூவராக மாறி உள்ளார்.அவரது வாக்குமூலமும் சிதம்பரத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.
 
 
இதைத் தொடர்ந்து தான் உள்துறை அமைச்சராக இருந்தபோது திறந்து வைத்த சிபிஐ புதிய அலுவலகத்துக்கு சிதம்பரமே கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவராக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...