அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழக இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல்!

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   23 , 2021  10:32:46 IST



2021 - 2022 ஆண்டுக்கான தமிழக இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட்டை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்தத் தொடரில் காலை 11 மணிக்கு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், மூன்று மாத கால செலவினத்துக்காக இடைக்கால பட்ஜெட்டாகவே இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு பொறுப்பேற்றபோது ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன், 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக அதிகரித்துள்ளதாக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. திமுக ஆட்சியில் தமிழகம் உபரி நிதி மாநிலமாக இருந்தாக தெரிவித்துள்ள அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழக வரலாற்றிலேயே அதிக கடனை வாங்கி வட்டி கட்டிய அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளதாக கடுமையாக சாடியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...