???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மெரினாவில் அசாம் இளைஞர்கள் போராட்டம்! 0 ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குக: ராமதாஸ் 0 உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு 0 மாணவர்கள் மீது தடியடி: ஸ்டாலின் கண்டனம் 0 டெல்லி: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம் 0 FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்! 0 அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை 0 உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவர் மருத்துவமனையில்! 0 சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு 0 திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு 0 அதிமுக வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வெளியீடு! 0 சச்சினுக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியர் 0 ஃபாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் 0 உள்ளாட்சி தேர்தல்: தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் 0 ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   14 , 2019  22:57:51 IST

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ. தொடர்ந்த இந்த வழக்கில் அவருக்கு உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. எனினும், அமலாக்கத்துறை வழக்கில் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...