![]() |
எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது!Posted : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 12 , 2019 22:03:22 IST
2011-ம் ஆண்டிற்கு பிறகு, அதாவது 8 ஆண்டுகளுக்கு பின்னர் நாட்டின் தொழில்துறை உற்பத்தி செப்டம்பா் மாதத்தில் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2018-செப்டம்பரில் 4.6 சதவீதமாக இருந்த தொழில்துறை உற்பத்தி, 2019 செப்டம்பரில் மைனஸ் 4.3 சதவீதமாக சரிந்தது. மக்கள் பொருட்கள் வாங்குவதைக் குறைத்து கொண்டுள்ளதும், அதற்கு தகுந்தாற்போல் உற்பத்தி குறைந்துள்ளதும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவே இந்த சரிவுக்கும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
|
|