???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'அலெக்ஸா என்னை கல்யாணம் கட்டிக்கிறியா'? – இந்தியர்களின் ஆசை

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   07 , 2020  07:24:29 IST


Andhimazhai Image
அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பான 'அலெக்ஸா' மிகவும் புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு கருவியாக பயன்பாட்டில் இருக்கிறது. நமது குரலை வைத்து தேவையான விஷயங்களை தேடித்தருகின்ற இந்த கருவியிடம் இந்தியர்கள் என்னமாதிரி விஷயங்களை அதிகமாக கேட்டிருக்கிறார்கள் என்ற தகவல் மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.
 
இதில் முதலில் தங்களுக்கு விருப்பமான பாடல்களை அதிகமாக கேட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு அலெக்ஸாவில் ஒரு நிமிடத்திற்கு 1,000 பாடல்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.
 
அமேசான் வெளியிட்டிருக்கும் தகவலின்படி 'ஹனுமான் சாலிஸா' முதல் இடத்தில் இருக்கிறது. இந்த பாடலை நிமிடத்திற்கு நான்குமுறை கேட்டிருக்கிறார்கள். இரண்டாம் இடத்தில் இருக்கும் பேபி ஷார்க்கை நிமிடத்திற்கு மூன்று முறை கேட்டிருக்கிறார்கள். 'லம்பெர்கினி' எனும் பஞ்சாமி பாடல் மூன்றாம் இடத்தில் உள்ளது.
 
எல்லாவற்றுக்கும் மேலாக நமது ஆட்கள் அலெக்ஸாவிடம் தமது காதலையும் வெளிப்படுத்தியுள்ளனர். காதலர் தினம் நெருங்கும் தருவாயில் இந்த செய்தி இணையத்தை கலக்கியிருக்கிறது.
 
கடந்த ஆண்டில் மட்டும் நிமிடத்திற்கு ஒருவர் அலெக்ஸாவிடம் 'ஐ லவ் யூ' சொல்லியிருக்கிறார். இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் 'அலெக்ஸா, வில் யூ மேரி மீ' என கேட்டிருக்கிறார். இவ்வாறு 2019-இல் அலெக்ஸாவுக்கு காதல் மழைதான்.
 
ஒருபக்கம் அலெக்ஸாவை நலம் விசாரிப்பதும் நடந்தேறியிருக்கிறது. நிமிடத்திற்கு 8 பேர் 'அலெக்ஸா, ஹவ் ஆர் யூ என கேட்டிருக்கிறார்கள்' என்றால் பாருங்கள்.
 
 
 
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...