அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   25 , 2022  18:04:37 IST

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய மகளிர் அணி.

இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜூன் 23 அன்று டி20 தொடங்கியது.  அதன்பிறகு நடைபெறும் ஒருநாள் தொடர், ஜூலை 7 அன்று முடிவடைகிறது.

முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது டி20 ஆட்டம் டம்புல்லாவில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை விஷ்மி 45, கேப்டன் சமரி 43 ரன்கள் எடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்த இலங்கை அணியை இந்தியப் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினார்கள். இதனால் இலங்கை அணி பேட்டர்களில் விஷ்மி, சமரியைத் தவிர வேறு யாராலும் இரட்டை இலக்க ரன்களை எடுக்க முடியவில்லை. தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்திய அணிக்கு மந்தனா நல்ல தொடக்கத்தை அளித்தார். 8 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மா, மேக்னா தலா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். இறுதிக்கட்டத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கவனமுடன் விளையாடி 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி, 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.


 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...