???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உணவு, நீரின்றி இந்திய தூதரக உதவிக்காக இத்தாலியில் காத்திருக்கும் மாணவர்கள்

Posted : புதன்கிழமை,   மார்ச்   11 , 2020  22:27:26 IST

இத்தாலியில் 12 மணி நேரத்துக்கும் மேலாக உணவு நீர் எதுவும் இல்லாமல் சொந்த நாட்டுக்கும் திரும்ப முடியாமல் விமான நிலையத்திலேயே 150 இந்திய மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் இல்லாததால், இத்தாலியிலிருந்து இந்தியா திரும்ப வேண்டிய 150 மாணவர்களை இந்திய அரசு இத்தாலியில் உள்ள மிலன் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு வந்தது.

கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால் இத்தாலிக்குள்ளும் செல்ல பயந்து, நாடு திரும்பவும் வழி இல்லாமல் விமான நிலையத்திலேயே 12 மணி நேரத்துக்கும் மேலாக உணவு, நீர் இல்லாமல் இந்திய மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்திய தூதரகத்தில் இருந்து பொறுப்பான பதில் எதுவும் வராததால் சோர்ந்து போன மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக வைரஸ் பரவல் உள்ளது என தெரிந்தும் நாட்டுக்குள்ளேயே மீண்டும் செல்கின்றனர்.

தங்கள் கல்லூரி படிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் சிலர் வீடுகளை காலி செய்து விட்டுதான் விமான நிலையம் வந்துள்ளனர். விமானத்தில் ஏற்றாததால் அவர்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருக்கின்றனர். இந்திய அரசு உடனடியாக தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...