செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
''மோடி ஆட்சியில் இந்திய குடிமகன் மீதான கடன் சுமை இரண்டு மடங்கு உயர்வு'': காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில், ஒவ்வொரு இந்திய குடிமகன் மீதான கடன் சுமை இரண்டரை…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
''மோடி ஆட்சியில் இந்திய குடிமகன் மீதான கடன் சுமை இரண்டு மடங்கு உயர்வு'': காங்கிரஸ் குற்றச்சாட்டு
Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 24 , 2023 09:53:56 IST
பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில், ஒவ்வொரு இந்திய குடிமகன் மீதான கடன் சுமை இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் (Gourav Vallabh), நாடு சுதந்திரம் பெற்றது முதல் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவின் கடன் சுமை 55 லட்சத்து 87 ஆயிரம் கோடியாக இருந்ததாக தெரிவித்தார்.
ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டு காலத்தில் கடன் சுமை 155 லட்சத்து 31 ஆயிரம் கோடியாக உயர்ந்துவிட்டதாகவும் சாடினார். 50 சதவீத மக்கள் நாட்டின் மொத்த செல்வத்தில் மூன்று சதவீதத்தை மட்டும் வைத்துள்ளதாகக் கூறிய அவர், நாட்டின் ஒரு தரப்பு மக்களின் செல்வ வளம் மேல் நோக்கி உயர்ந்தும், மற்றொரு தரப்பு மக்களின் பொருளாதாரம், கீழ் நோக்கி செல்வதாகவும் கவலை தெரிவித்தார்.
ஒவ்வொரு குடிமகன் மீதான கடன் சுமை 43 ஆயிரத்து 124 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் இது ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 373 ரூபாயாக உயர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி அரசு நமது வருங்கால சந்ததியினரை கடனில் புதைத்து வருவதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
|