செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்!
பிரபல இந்தி எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீக்கு தலைசிறந்த சர்வதேச இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் பரிசு கிடைத்துள்ளது. இவர்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்!
Posted : வெள்ளிக்கிழமை, மே 27 , 2022 19:35:14 IST
பிரபல இந்தி எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீக்கு தலைசிறந்த சர்வதேச இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் பரிசு கிடைத்துள்ளது. இவர் இந்த விருதை அமெரிக்காவைச் சேர்ந்த மொழி பெயர்ப்பாளரான டெய்ஸி ராக்வெல் என்பவருடன் பகிர்ந்துகொள்கிறார். இந்த விருதின் பரிசு தொகை 50 ஆயிரம் பிரிட்டன் பவுன்ட் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 லட்சமாகும். இதன் மூலம் சர்வதேச புக்கர் விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமை கீதாஞ்சலி ஸ்ரீக்கு கிடைத்துள்ளது.
புக்கர் விருதானது ஆங்கில படைப்புகள் அல்லது வேறு மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்ப்பாகும் இலக்கிய ஆக்கங்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. மொழிபெயர்க்கப்பட்ட ஆக்கங்களுக்கான பரிசை எழுத்தாளருடன் சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளரும் பகிர்ந்து கொள்வார். இந்தாண்டு 135 புத்தகங்கள் பரிந்துரையில் இருந்த நிலையில், இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய டோம்ப் ஆஃப் சான்ட் (Tomb of Sand) என்ற நாவல் விருதை தட்டிச் சென்றது.
பிரிட்டன் நாட்டின் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பரிசு பெற்ற கீதாஞ்சலி இந்த விருதை நான் வெல்வேன் என எதிர்பார்த்ததே இல்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த மாபெரும் அங்கீகாரத்தை பெற்றதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இதை பெறுவதில் நான் பெருமையுடனும் அதே வேளை பணிவுடனும் பெற்றுக்கொள்கிறேன் என்றார்.
இந்தி உள்ளிட்ட பல தெற்காசிய மொழிகளுக்கு மாபெரும் இலக்கிய பாரம்பரியம் உள்ளது எனக் கூறிய அவர், இந்த மொழிகளின் வளமான எழுத்தாளர்களை உலக இலக்கியம் அறிந்து கொள்வது சிறப்பாகும் என்றார். இவரின் மொழி பெயர்ப்பாளரான ராக்வெல் ஓவியரும் கூட. இவர் அமெரிக்காவின் வெர்மோன்ட் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நாவல் இந்திய பாகிஸ்தான் பிரிவினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட தீவிரமான கதைக்களம் கொண்ட நாவலாகும்.
டெல்லியில் வசித்து வரும் 64 வயதான கீதாஞ்சலி ஸ்ரீ இளமை காலத்தை உத்தரப் பிரதேசத்தில் கழித்தவர். இவரது தந்தை ஒரு அரசு ஊழியர் ஆவார். இந்தி எழுத்து உலகின் சக்ரவர்த்தியான பிரேம்சந்த் மீது மிகுந்து ஈடுபாடு கொண்ட கீதாஞ்சலி அவர் குறித்து பல்வேறு ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
|