அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ?

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   19 , 2021  15:58:32 IST


Andhimazhai Image

மேடையில் இருந்து டெஸ்ட் தொடர் வென்றதற்கான கோப்பையை எடுக்கிறார் ரஹானே. கொரோனா காரணமாக கோப்பையைக் கொடுக்கும் நிகழ்வு இல்லை. எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். முகமெல்லாம் மகிழ்வாக கோப்பையைத் தூக்கி, அணியின் புதுமுகமான நடராஜனிடம் கொடுக்கிறார். நட்டு தூக்கிப் பிடித்தவண்ணம், அணியுடன் போட்டோவுக்கு புன்னகைக்கிறார்.

நடராஜனின் கதைதான் இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மிகச் சரியாகப் பிரதிபலிப்பது. அணியில் இடமே இல்லை. நெட் பந்துவீச்சாளராகப் போகிறவருக்கு டி20, ஒரு நாள், டெஸ்ட் தொடர் எல்லாவற்றிலும் அறிமுகமாகும் வாய்ப்புக் கிடைக்கிறது.

அணியில் கோலி இல்லை, பும்ரா இல்லை, ஜடேஜா இல்லை.. எல்லாரும் புது பந்துவீச்சாளர்கள். களமிறங்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவருக்குக் காயம். இருந்தும் இறுதிப்போட்டியில் அடித்து நொறுக்கி என்ன ஒரு வெற்றி!

வாஷிங்டன் சுந்தருக்கும் டெஸ்டில் இது அறிமுகப்போட்டிதான். ஜடேஜாவின் காயம் காரணமாக உள்ளே வந்தவர். முதல் இன்னிங்ஸில் அரை சதம், இரண்டாவது இன்னிங்க்ஸில் கிடுகிடுவென 22 ரன்கள். அதுவும் கம்மின்ஸ் பந்தில் அந்த ஆறு ரன்கள்.. அடடா அசத்திவிட்டார்!

பிரிஸ்பேன் மைதானத்தில் பந்து கும்மென்று மேல் எழுந்து வரும். உஸ் உஸ் என்று பாயும் பந்துகளை இளம் வீரர் சுப்மான் கில் மிக எளிதாக சமாளித்துப் பெற்ற 91 ரன்களைச் சொல்வதா?

எல்லா ஆஸி வேகப்பந்து வீச்சாளர்களையும் போட்றா மவனே போடு என்று கட்டை போட்டு  களைப்படைய வைத்து தன் மிக மெதுவான அரை சதத்தைப் போட்ட புஜாராவைச் சொல்வதா?

கில் அவுட் ஆனவுடன் உள்ளே வந்து கட்டையைப் போடாமல் அடித்து ஆட முயன்று, தெளிவான செய்தியை உணர்த்திய கேப்டன் ரஹானேவைச் சொல்வதா?

ஆரம்பத்தில் மெதுவாக ஆடினாலும் பதினைந்து ஓவர்களில் 60 ரன்கள் எடுக்கவேண்டிய நிலை வந்தபிறகு டி20 மனநிலைக்கு மாறிய ’மேன் ஆப் தி  மேட்ச்’ ரிஷப் பந்தை சொல்வதா? எவ்வளவு கேட்ச் விட்டாலும் அடித்து வெற்றியைத் தேடித்தந்திருக்கும் இந்த 23 வயது வீரர் இன்னும் சாதிப்பார். அதுவும் ஒரு போர் அடித்துவிட்டு மடார் என மல்லாக்க விழுந்தாரே… ஆஸி வீரர்கள் நிலைமை மிக பரிதாபம்!

சிராஜின் கதையும் கிட்டத்தட்ட நடராஜன் கதைதான். மற்றவர்களுக்குக் காயம் பட்டதால் உள்ளே வந்தவர். மிக வறுமையான பின்னணியில் இருந்து விளையாட்டு ஆர்வம் என்ற ஏணியில் ஏறி மேலே வந்தவர். ஆட்டோ ஓட்டுநரான தந்தையின் மரணத்தை எண்ணி எண்ணி உணர்ச்சிவயப்பட்டவர், ஐந்து விக்கெட்டுகளை அள்ளி சாதித்தார்.

ஷர்துல் தாக்கூர், முதல் இன்னிங்கிஸில் தாக்குப் பிடித்து ஆடி, பந்துவீச்சாளரா, மட்டை ஆட்டக்காரரா என ஆச்சர்யப் பட வைத்தாரே?

இந்த அணிதான் இங்கு ஆடிய முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு சுருண்டது. அதில் இருந்து மீண்டு இரண்டாம் டெஸ்டை வென்றது. மூன்றாம் டெஸ்டை டிரா செய்தது. நான்காம் டெஸ்டை வென்று தொடரை வென்றது.. அதுவும் ஸ்டார்க், கம்மின்ஸ், லியான் போன்ற பந்துவீச்சாளர்களும் ஸ்மித், வார்னர் போன்ற வீரர்களும் இடம் பெற்ற ஆஸ்திரேலிய அணியை என்றால் நம்பவா முடியும்?

இந்த தொடரின் மேன் ஆப் தி சீரிஸ் விருதை பாட் கம்மின்ஸுக்குக் கொடுத்தார்கள். ஆனால் இந்திய அணியின் ‘பிசியோதெராப்பிஸ்ட்டுக்கு’ அல்லவா கொடுத்திருக்கவேண்டும் என்கிற அளவுக்கு பிஸியாக இருந்தாரே அவர்?

ஜடேஜாவுக்கு மூட்டு கழன்றது; பும்ராவுக்கு வயிற்று கிழிவு, அஸ்வினுக்கு முதுகு வலி, விஹாரிக்கு தசைக் கிழிவு... அதுமட்டுமா, ஆட்டம் முழுக்க வீரர்கள் பந்துவீச்சைக் கையிலும் முழங்கையிலும் வாங்கித் துடித்துக்கொண்டே இருந்தார்களே?

இவ்வளவு அடிவாங்கி, துவண்டு, சுருண்டுபோனபோதும், வெற்றி என்ற மூன்றெழுத்தை மட்டுமே துரத்தியதால்தானோ இன்றைக்கு இனிக்கிறதோ?

-முத்துமாறன்

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...