???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜார்க்கண்ட் தேர்தல்: இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு 0 குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா 0 அசாம் முதல்வர் இல்லம் மீது கல் வீசி தாக்குதல்! 0 ராகுல் மட்டுமே மோடிக்கு மாற்று: அசோக் கெலாட் 0 நீதிமன்ற தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த மரண அடி: ஸ்டாலின் 0 எங்கள் நாடு மத நல்லிணக்கம் கொண்டது: வங்காளதேசம் 0 குரூப் 1 தேர்வு சர்ச்சை: டி.என்.பி.எஸ்.சி விளக்கம் 0 நதிகளை தூய்மைப்படுத்த பசுமைத் தீர்ப்பாயம் காலக்கெடு 0 மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா! 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காஷ்மீர் பற்றிய பாகிஸ்தான்-சீனா கூட்டறிக்கை: இந்தியா நிராகரிப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   10 , 2019  23:35:19 IST

காஷ்மீர் பற்றிய பாகிஸ்தான்-சீனா கூட்டறிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ரவீஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது,

"சீன வெளியுறவு மந்திரி சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற பின்னர் பாகிஸ்தானும், சீனாவும் காஷ்மீர் பற்றி கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. இதனை நாங்கள் நிராகரிக்கிறோம். ‘சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை’ என்ற பெயரிலான ஒரு திட்டத்தை அந்த நாடுகள் அறிவித்துள்ளன. இந்த பாதை இந்திய எல்லையில் பாகிஸ்தான் 1947-ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியில் வருகிறது.

இதற்காக பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியா தனது உறுதியான வருத்தத்தை தெரிவிக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இப்போது உள்ள நிலையை மாற்றும் வகையில் வேறு எந்த நாடு முயன்றாலும் இந்தியா தயக்கமின்றி எதிர்க்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை இரு நாடுகளும் கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளோம்" என தெரிவித்தார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...