அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் 0 காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் 0 தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் 0 வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி 0 நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு 0 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 “கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” - முதலமைச்சர் பழனிசாமி “கொரோனா 0 கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 0 தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி 0 மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 0 பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை! 0 அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி!

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   27 , 2020  07:30:43 IST


Andhimazhai Image

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

சிட்னியில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 156 ரன்கள் வரை விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக விளையாடி அணிக்கு சரியான களத்தை அமைத்து கொடுத்தனர். 27 ஓவர்கள் வீசியும் இந்திய அணியின் பவுலர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இறுதியில் டேவிட் வார்னர் 69 ரன்கள் எடுத்திருந்த போது வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் பிஞ்சுடன் சேர்ந்து நிலைத்து நின்று விளையாட, இருவரும் சதம் அடித்தனர்.

ஆரோன் பிஞ்ச் 114 ரன்களும் (124 பந்துகள், 9 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டீவ் ஸ்மித் 105 ரன்களும் (66 பந்துகள், 11 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம் ஸ்மித் குறைந்த பந்துகளில் சதம் அடித்த மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெறுகிறார். அதேபோல் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மேக்ஸ்வெல்லும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானர்.

50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 374 என்ற வலுவான ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தது.

அதன்பின், களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், ஷிகர் தவான் டி-20 போட்டிகளில் விளையாடியது போல அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 5-வது ஓவர் வரை இந்திய அணியின் ரன்ரேட் ஏறக்குறைய 10 ஆக இருந்தது. மயங்க் அகர்வால் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தன் விக்கெட்டை பறிக்கொடுத்தார். கேப்டன் கோலியிடம் பெரிய ஆட்டத்தை எதிர்பார்த்திருந்த நிலையில் 21 ரன்களில்  அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயர்ஸ் ஐயர், கே.எல்.ராகுல் 20 ரன்களை கூட தாண்டவில்லை. ஹர்திக் பாண்டியா மட்டுமே இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இந்திய அணி தரப்பில், ஷிகர் தவான் 74 ரன்கள் (86 பந்துகள், 10 பவுண்டரி), ஹர்திக் பாண்டியா 90 ரன்கள் (76 பந்துகள், 7 பவுண்டரி, 4 சிக்சர்)  அதிகபட்ச ரன்களை எடுத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்தது. இதன்காரணமாக ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்று  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...