???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தலித்துகளுக்கும் , இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடாக மாறுகிறதா இந்தியா ?

Posted : திங்கட்கிழமை,   மே   27 , 2019  08:29:08 IST


Andhimazhai Image
2019ம் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று சில நாட்களேயான நிலையில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளிவருகின்றன. 
 
மே 23ம் தேதி ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. மத்திய பிரதேத்தில் உள்ள சியோனி என்ற கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர், ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டார்கள். மாட்டிறைச்சி வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. 
 
ஸ்ரீராம் சேனாவை சேர்ந்த தலைவர் சுபம் பஹேல், இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். ’ஸ்ரீ ராம் சொல்லு’ என்று இளைஞர் ஒருவரை, ஸ்ரீராம் சேனா அமைப்பினர்  கட்டையால் அடிக்கின்றனர். வலியால் கதறும் அவரின் குரலை நம்மால் கேட்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவரை மிரட்டி, அவர்களுடன் வந்துள்ள பெண்ணை செருப்பால் அடிக்கச்சொல்கிறார்கள். 
 
இந்த சம்பவம் மே 22ம் தேதி நடைபெற்றிருக்கிறது. ஆனால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூகவலைதளங்களில் இந்த வீடியோ பரவியதும் அவர்களை கைது செய்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வீடியோவில் பார்க்கும்போதே அவர்கள் எவ்வளவும் கொடூரமாக தாக்கப்பட்டார்கள் என்று  அனைவருக்கும் தெரியவரும். ஆனால் காவல்துறையினரோ, தாக்கப்பட்டவர்களுக்கு பெரிதாக காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறுகின்றனர். 
 
 
தாக்குதலில் ஈடுபட்ட  ஸ்ரீராம் சேனா தலைவர் சுபம் பஹேல், போபால் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட சாத்வி பிரக்யா தாகுருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 
மே 26ம் தேதி ஹரியானாவில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்புக்கொண்டிருந்த முகமத் பர்கத் என்ற இளைஞரை இந்து அமைப்பினர் தாக்கியுள்ளனர். முகமத் பர்கத் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை எடுக்குமாறு கட்டாயப்படுத்தினர். இதற்கு முகமத் மறுப்புத் தெரிவித்த நிலையில், அவரை பலமாக தாக்கி தகாத வார்த்தைகள் பேசி அவமானப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக முகமத் பர்கத்யின் உறவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
 
மே 27 (அதாவது இன்று )பிகார் மாநிலத்தில் உள்ள பாரிபூர் பகுதியில் இஸ்லாமிய இளைஞரை ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  பாரிபூர் பகுதியை சேர்ந்த முகமது யாசிம் என்ற இஸ்லாமிய இளைஞர் சோப்பு விற்பதற்காக  கும்பி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த பஞ்சாயத்து தலைவர் ராஜீவ் யாதவ் (இவர் ஒரு ஆர்.எஸ். எஸ் தொண்டர்), இவரின் பெயரை கேட்டுள்ளார். 
 
தன்னுடைய பெயரை அந்த இளைஞர் தெரிவித்ததும் , ’நீ ஒரு இஸ்லாமியன்..நீ ஏன் இங்கே இருக்கிறாய்.. பாகிஸ்தானுக்கு ஓடு’ என்று சொல்லிவிட்டு துப்பாக்கியால் அவரை  சுட்டுள்ளார் ராஜீவ். இதைத்தொடர்ந்து யாரும் உதவிக்கு வராததால்  முகமது யாசிம், தானே தனியாக கட்டுப்போட்டு, காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
 
இது ஒரு புறம் இருக்க மே 26ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜூத்ராய் ஹன்ஸ்தா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 2017ம் ஆண்டு இவர் முகநூலில் ஆதிவாசிகள் உரிமை குறித்தும் மாட்டிறைச்சி உண்பது குறித்தும் பதிவிட்டிருந்தார். சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து, இந்த கருத்தை பகிர்ந்ததால் இவர்   கைது செய்யப்பட்டார். 2017ம் ஆண்டு அவரை கைது செய்யாமல் தவிர்ததற்கு  வாக்கு அரசியல்தான் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். 
 
மே 23ம் தேதி, மும்பையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பாயல் சல்மான் தட்வி என்பவர் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இவருக்கு பெரிதாக எந்த சிக்கலும் விடுதியில் ஏற்படவில்லை. இவரின் பின்புலனை விசாரித்த சீனியர்கள், இவர் சாதியைக் கூறி அவமானப்படுத்தியுள்ளனர். 
 
இதுதொடர்பாக பாயலின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் இந்த புகாரின் பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஒருகட்டத்திற்கு மேல் சீனியர்களின் வார்த்தைகளை தாங்கிக்கொள்ள இயலாத பாயல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது மகளின் கனவை கலைத்த, மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாய் கூறியுள்ளார். 
 
வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழும் நாடு  என்ற பண்பு வெறும் பொய்யான பிம்பம் என்று இந்த ஐந்து சம்பவங்களும் உணர்த்தியிருக்கிறது. மதம், சாதி என்ற இரு வேற்றுமையும் நம்மை எப்படி எல்லாம் பிரித்து வைத்திருக்கிறது என்பதற்கு இந்த சம்பவங்களே  சிறந்த உதாரணங்கள். இஸ்லாமியர்களும், தலித்துகளும் ஒருவித பயத்துடன் இந்தியாவில் வாழ வேண்டும் என்ற எண்ணத்தால்தான்  இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாட்டின் பாதுகாவலர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் மோடி, இவர்களை பாதுகாக்க என்ன செய்வார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...