???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   07 , 2020  21:36:11 IST

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு, 10 லட்சம் பேரில் 505 பேருக்குத்தான் தொற்று உள்ளது என்று மத்திய அரசு புள்ளி விவரங்களுடன் திட்டவட்டமாக கூறி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று 7.19 லட்சத்தை கடந்து உள்ளது.

உலகளவில் 10 லட்சம் பேருக்கு சராசரியாக 1453 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை வெறும் 505 ஆகத்தான் உள்ளது.

இதையொட்டிய உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா நிலவர அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டி இருக்கிறது. இதன்படி, லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் 10 லட்சம் பேருக்கு 15 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த எண்ணிக்கை பெருவில் 9,070, அமெரிக்காவில் 8,560, பிரேசிலில் 7,419, ஸ்பெயினில் 5,358 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டு வரும் இறப்புகளும் இந்தியாவில் குறைவுதான். இந்தியாவில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து இருந்தாலும், இது பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான அளவாகத்தான் இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பலி 10 லட்சம் பேருக்கு 14 ஆகத்தான் இருக்கிறது. ஆனால் உலக அளவிலான சராசரி என்பது இதை விட 4 மடங்குக்கும் அதிகம். அது 68 ஆக உள்ளது.

இங்கிலாந்தில் 10 லட்சம் பேருக்கு இறப்புவீதம் 651, ஸ்பெயினில் 607, இத்தாலியில் 576, பிரான்சில் 456, அமெரிக்காவில் 391 ஆக இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 15 ஆயிரத்து 515 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இந்தியாவில் மொத்தம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரத்து 947 ஆக உள்ளது. இது 61.13 சதவீதம் ஆகும். தற்போது நாடு முழுவதும் தொடர் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 59 ஆயிரத்து 557 ஆகும்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...