இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய நேரப்படி காலை 9:10-க்கு போட்டி ஆரம்பிக்கிறது. இன்றைய போட்டியில் இரு அணிகளின் சார்பில் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு:
இந்திய அணியில், விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, மொகமது ஷமி, நவ்தீப் ஷைனி ஆகியோரும், ஆஸ்திரேலிய அணியில், ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாயினிஸ், மார்னஷ் லபுஷான், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் காரே, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸம்பா, ஜோஸ் ஹசல்வுட ஆகியோரும் விளையாடுகின்றனர்.