???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி

Posted : திங்கட்கிழமை,   மே   20 , 2019  22:31:49 IST

தமிழக வணிகவரித்துறையில் ஜூன் 1-ம் தேதி முதல் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாகவும், மத்திய அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது முதல் வணிக வரித்துறையில் மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகத் தமிழக அரசு கூறிவந்தது.

இந்நிலையில் ஜூலை 1 முதல் அதற்காக பணிகள் நடைபெற உள்ளதாகவும், 6 கூடுதல் ஆணையர்கள் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தமிழக வணிக வரித் துறையில் கூடுதல் ஆணையர்கள் மட்டுமல்லாமல் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் மாநில வரி அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களும் புதியதாக உருவாக்கப்படுகின்றன.

இப்படி புதியதாக உருவாக்கும் பல முக்கிய அதிகாரிகள் பதவிகளுக்கு அவுட் சோர்சிங் முறையில் மத்திய அரசு ஊழியர்கள் நிரப்பப்பட உள்ளனர். இவர்கள் தனியார் அலுவலகங்களில் வேலை பார்க்கும் அவுட்சோர்சிங் பணியாளர்கள் போன்று, மத்திய அரசின் கீழிருந்து தமிழக அரசு அலுவலகத்தில் பணிபுரிவார்கள். ஆனால், எவ்வளவு காலங்களுக்கு இந்த பணியில் அமர்த்தப்படுவார்கள், இதனால் தமிழக அரசு அதிகாரிகளின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமா என்ற விவரங்கள் தெரியவில்லை.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...