???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   13 , 2018  22:49:37 IST

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் எட்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர். ஆபரேஷன் ‘கிளீன் மணி’ என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள், அவருக்கு சொந்தமான மதுபான ஆலை, தொலைக்காட்சி நிறுவனம் என சுமார் 180 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
 
5 நாட்கள் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திடம் 2 நாள் அனுமதி பெறப்பட்டது.
 
வருமான வரித்துறை அதிகாரி வீரராகவ ராவ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு இன்று சென்றனர். இந்த குழுவில் ஒரு பெண் அதிகாரியும் இடம்பெற்றிருந்தார். இவர்கள் காலை 11.30 மணிக்கு சசிகலாவிடம் விசாரணையை தொடங்கினர்.
 
வருமான வரி சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோரிடம் விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி துருவி கேள்வி கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...