???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்!

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   18 , 2017  06:17:33 IST

தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஞானவேல்ராஜா சென்னையில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘அண்ணாதுரை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசும்போது, ‘‘எல்லோரும் ரசித்து சிரிக்கும் நகைச்சுவை நடிகர், தான் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கு தொல்லை கொடுக்கிறார். அந்தத் தயாரிப்பாளர் பட அதிபர்கள் சங்கத்தில் புகார் அளித்து இருக்கிறார். நகைச்சுவை நடிகர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.  அவர் குறிப்பிட்ட நகைச்சுவை நடிகர் வடிவேலு. அந்தப்படம் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி. இதன் இயக்குநர் இம்சை அரசன் முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன். கதாநாயகியாக பார்வதி ஓமன குட்டன் தேர்வு செய்யப்பட்டார். இந்த படத்துக்கு ‘இம்சை அரசன் 24–ஆம் புலிகேசி’ என்று பெயரிடப்பட்டது.

 

கடந்த ஆகஸ்டு மாதம் படவேலைகள் தொடங்கின. சென்னையில் ரூ.3 கோடி செலவில் அரண்மனை அரங்குகள் அமைத்து அதில் வெளிநாட்டு அழகிகளுடன் வடிவேலு ஆடிப்பாடுவது போன்ற பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. பின்னர் வசனக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

 

படப்பிடிப்பின்போது இயக்குனர் சிம்புதேவனுக்கும் வடிவேலுவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ‌ஷங்கர் இருவருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினார். ஆனால் மீண்டும் படப்பிடிப்பில் தனக்கு கொடுக்கப்பட்ட உடைகளில் திருப்தி இல்லாமல் அவற்றை அணிய வடிவேலு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. தனது சொந்த ஆடை வடிவமைப்பாளர்தான் தனக்கு உடைகள் வடிவமைக்க வேண்டும் என வடிவேலு வற்புறுத்தியதுதான் பிரச்சனை பெரிதானதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.  இதனால் படப்பிடிப்பு மீண்டும் நின்று போனது. இதைத்தொடர்ந்து பட அதிபர் தரப்பில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் கொடுக்கப்பட்டது. இதுவரை பத்து நாட்கள்தான் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஆனால் வடிவேலுக்கு மட்டும் இதுவரை படத்தின் சம்பளத்தில் எழுபது சதம் வரை கொடுக்கப்பட்டுவிட்டது என்கிறது தயாரிப்பாளர் தரப்பு. படப்பிடிப்பு நடத்தாமல் தினமும் அரங்க வாடகை கொடுக்க வேண்டிய சூழல். தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவு. படத்திற்காக போடப்பட்ட செட் மழையில் சேதமடைந்துவிட்டது. மேலும் உடன் நடிக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட நடிகர்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

 

வடிவேலுவிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு பட அதிபர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால் நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு நெருக்கமாக இருக்கும் வடிவேலு மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் எஸ்.ஆர்.பிரபு இந்த பிரச்சனையில் நடிகர் வடிவேலுவின் பதில் பெறப்பட்ட பின் இறுதி முடிவு நவம்பர் மாத இறுதியில் எடுக்கப்படும் என்கிறார் உறுதியாக.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...