அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பணபலத்தால் உலக கிரிக்கெட்டையே தன் பிடியில் வைத்துள்ளது இந்தியா: இம்ரான் கான்

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   12 , 2021  20:01:13 IST

சமீபத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பாதியிலேயே ஒடிப்போனதற்குக் காரணம் இந்தியா கிளப்பி விட்ட பீதிதான் என்று பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
 
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உலக கிரிக்கெட்டின் நிதியாதாரப் பிடி இந்தியா கையில் உள்ளது, எனவே கிரிக்கெட்டை அவர்கள் ஆட்டிப்படைக்கின்றனர் என்று சாடியுள்ளார்.  மிடில் ஈஸ்ட் ஐ என்ற ஊடகத்திற்கு இம்ரான் அளித்த பேட்டியில், “இங்கிலாந்து தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டனர். அதாவது பாகிஸ்தானுடன் ஆடுவதன் மூலம் இந்த நாட்டுக்கு ஏதோ பெரிய சாதகம் செய்து விடும் நினைப்பில்தான்  இங்கிலாந்து போன்ற நாடுகள் இன்னமும் கருதுகின்றன. இதற்கு ஒரு காரணம் பணம்.
 
பணம்தான் கிரிக்கெட்டை ஆள்கிறது, பணத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆள்கிறது, அதனால் உலக கிரிக்கெட்டை இந்தியா ஆள்கிறது, இதுதான் விஷயம். எனவே பாகிஸ்தானை செய்வது போல் இந்தியாவைச் செய்ய இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு துணிச்சல் இருக்கிறதா என்றால் இல்லை. காரணம் பணம். இந்தியா நிறைய பணம் சம்பாதித்து கொடுக்கிறது.
 
இங்கிலாந்து தொடரை ரத்து செய்வதன் பின்னணியும் பணம்தான் அதனால்தான் கூறுகிறேன் இங்கிலாந்து தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு விட்டது” என இம்ரான் கான் கூறினார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...