???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இமையத்திற்கு இயல்விருது - 2018 அறிவிப்பு

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   24 , 2018  09:45:32 IST


Andhimazhai Image

கனடாவில் உள்ள தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கும் வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது இந்த ஆண்டு எழுத்தாளர் இமையத்துக்கு வழங்கப்படுகிறது.

இது பற்றிய அறிக்கை பின் வருமாறு:

தமிழ்இலக்கியத்தோட்டம், 2018-ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் இயல்விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்இலக்கியஉலகில் தொடர்ந்துஇயங்கிவரும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகிறது.

எழுத்தாளர் இமையம்தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது விருத்தாசலத்தில் ஆசிரியராக பணிபுரிந்துவரும், வெஅண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்ட இவர் எளிமையான விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர்.  தமிழ்நாட்டு கிராமங்களில்வாழும் ஒடுக்கப்பட்டமக்களே இவர்கதைகளின்பாத்திரங்கள். அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம்,  சாதி, வகுப்பு, பால்பேதங்களால்அவர்கள் படும்அவலம்போன்றவற்றை அவர்களின்மொழியிலேயே கதைகளாக வடித்திருக்கிறார்.

”தமிழில் இதற்கு இணையாக நாவல்இல்லை” என்றுஅவரது முதல் நாவலான “கோவேறுக்கழுதைகள்”  நூலைதமிழின் முன்னோடிஎழுத்தாளர் திரு. சுந்தரராமசாமி விமர்சித்திருக்கிறார்.இந்நாவல் Beasts of Burden எனஆங்கிலத்தில்வெளியாகியுள்ளது.

மனிதமனங்களின்பல்வேறுபட்டமனநிலைகளைதன்ஒவ்வொருபுனைவிலும்காத்திரமாகபதிவுசெய்துவரும்இமையம்தமிழ்படைப்பாளிகளில்தவிர்க்கமுடியாதஆளுமையாகவும், சாதிஆதிக்கமனோபாவத்தைதொடர்ந்துவிமர்சித்துவரும்ஒருவராகவும்விளங்குகிறார். ‘இலக்கியப்படைப்பு என்பது சமூகவிமர்சனம். சமூகஇழிவுகளாக இருப்பவற்றை விமர்சனம்செய்வதுதான்ஒருநிஜமானகலைஞனின், கலைப்படைப்பின்வேலை. சமூகஇழிவுகளைசுட்டிக்காட்ட, அடையாளப்படுத்தவே எழுதுகிறேன். நான் சரியாகவும், முழுமையாகவும் சமூகஇழிவுகளை பதிவுசெய்திருக்கிறேனா என்பதில்தான்என்னுடைய கதைகளுக்கான உயிர் இருக்கிறது. எழுத்தின்அடிப்படையே அதுதான்.’ இவ்வாறு இமையம்சொல்கிறார்.

இமையத்தின் கதைகள் ’இப்படிப்பட்ட சமூகத்திலாநாம் வாழ்கிறோம் ’எனவாசகர்களை கண்ணீர்விடவும், கூச்சப்படவும் வைப்பவை. இவருடையசிறுகதைகள்நம்மை புதுஉலகத்திற்குள் இட்டுச்செல்கின்றன. சாதிஆணவக்கொலையைப்பற்றிய பெத்தவன்என்கிற நெடுங்கதை,இவரின்படைப்புகளில்மிகவும்முக்கியமானஒன்றுஎனகருதப்படுகிறது.இக்கதைதெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டு திருப்பதிப்பல்கலைக்கழக பாடத்திட்டத்தில்ஒருபகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோவேறுகழுதைகள், ஆறுமுகம், செடல், எங்கதெ, செல்லாதபணம் ஆகியஇவருடையநாவல்களும்,நாலுசிறுகதைதொகுப்புகளும்இதுவரைவெளிவந்துள்ளன. அக்னிவிருது, பெரியார் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கவிருது, திருப்பூர்தமிழ்ச்சங்கவிருது உள்படபலவிருதுகள் இதுவரை பெற்றிருக்கிறார்.

இவருடைய மனைவி  புஷ்பவல்லி, மகன்கள் கதிரவன், தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் விருத்தாசலத்தில் இவர் வசித்துவருகிறார். விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2019 ஜூன்மாதம் நடைபெறும்.

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...