???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மறுபடி படத்தயாரிப்பில் இறங்குகிறாரா இளையராஜா?

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   07 , 2014  04:40:13 IST

 
இளையராஜா படத்தயாரிப்பு வேலைகளை நிறுத்திவைத்திருந்தார். இசையமைக்க மட்டுமே முன்னுரிமை கொடுத்துக்கொண்டிருந்த அவருக்கு தற்போது மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கும் எண்ணம் வந்திருக்கிறது. அதற்குக்காரணம், அவருடைய அண்ணன் குடும்பம் மற்றும் சில உறவினர்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் அந்த எண்ணம் வந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். யாரை வைத்துப் படமெடுப்பது என்கிற விவாதம் தற்போது நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட்பிரபுவையே இயக்குநராக்கி ஒருபடம் எடுக்கலாம் என்கிற யோசனையை இளையராஜா நிராகரித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சந்தை மதிப்புள்ள கதாநாயகர்களை வைத்துப் படமெடுத்தால்தான் பணம் சம்பாதிக்கமுடியும் என்கிற எதார்த்தத்தை அவர் உணர்ந்திருக்கிறாராம். அதனால் இன்றைக்கு சந்தைமதிப்புள்ள நாயகர்கள் யார் யார் என்பதைக் கணக்கிலெடுத்து அவர்களுடைய தேதிகளை வாங்குவது, அதன்பின்னர் அவர்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுத்துப் படமாக்குவது என்று முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் போன்றோரிடம் இப்போதைக்குப் போகமுடியாது என்கிற நிலை. எனவே அடுத்த நிலையிலிருக்கிற விஷால், சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி, கார்த்தி, ஆர்யா போன்ற நடிகர்களில் யாராவது ஒருவரை நடிக்கவைக்கலாம் என்று நினைக்கிறார்களாம். இதனால் இந்த நடிகர்களைத் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இளையராஜா வழங்கவிருக்கும் படத்தில் நடிக்க யாரும் தயங்க மாட்டார்கள் என்றாலும் எல்லோருமே ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை ஒப்புக்கொண்டிருப்பதால், இப்போது ஒப்புக்கொண்டாலும் படம் தொடங்க ஆறுமாதங்களுக்கு மேலாகிவிடும் என்று சொல்கிறார்கள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...