???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாத்திமா தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம்

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   14 , 2019  02:55:32 IST

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

 

 கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் முதலாமாண்டு மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறை மாணவியாக பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு 12.00 மணிக்கு விடுதியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 

இவர் தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் காரணம் என்றும் பாத்திமா இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்தவராக இருந்ததால் மதத்தின் அடிப்படையில் அவரை பேராசிரியர் துன்புறுத்தி உள்ளார் என்று மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தனது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரையில் தங்களது போராட்டம் ஓயாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

இந்நிலையில், ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் சென்னை ஐஐடிக்கு  வருகை தந்து, மாணவி தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ’மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.  அனுபவமுள்ள அதிகாரிகள் கொண்ட  குழு இதனை விசாரிக்கும்’ என்றார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...