அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கட்டா குஸ்தி: திரைவிமர்சனம்! 0 இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி அமல்படுத்துவதை நான் எதிர்க்கிறேன்: கிரண் ரிஜிஜு 0 தமிழகத்தில் அனைத்து கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை! 0 தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழையே பெய்யும்! 0 அறப்போர் இயக்கத்துக்கு எதிராக நீதிமன்ற படியேறிய எடப்பாடி பழனிசாமி 0 பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம் 0 வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்: தமிழக அரசு 0 மும்பையில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை! 0 குஜராத் முதற்கட்ட தேர்தலில் 60.20% வாக்குப்பதிவு! 0 ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 21 மசோதாக்கள்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு 0 கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை டிபியாக வைத்து 40 லட்சம் ஏமாற்றிய பெண்! 0 பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து! ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து உலகசாதனை! 0 தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை! 0 'கடைமையை செய்யாமல் தேவையில்லாதவற்றை ஆளுநர் பேசுகிறார்' – கி.வீரமணி 0 ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்: கவர்னருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   04 , 2022  09:43:38 IST

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக தடை செய்தால், அதில் நடிக்க மாட்டேன் என நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.
 
‘ஆழி’ திரைப்படத்தின் படப்படிப்பிற்காக கன்னியாகுமரி சென்றுள்ள நடிகர் சரத்குமார் அங்குள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்கள் மற்றும் ஆலயபணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டார். 
 
இதனையடுத்து கோயில் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் படத்தில் மையகதாபாத்திரமான பெரிய பழுவேட்டரையர் மக்களை சென்றடைந்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
 
மேலும் சமக கட்சியில் செயல்பாடுகள் தற்போது  அமைதியாக உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அமைதியாக இருக்கின்ற நதிதான் ஆழமாக பாயும் என கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், “குடிபழக்கம் குடியை கெடுக்கும் என கூறிவிட்டு டாஸ்மாக் கடைகளை தடை செய்யவில்லையே, சிகரெட் பிடிப்பது கேடு விளைவிக்கும் என விளம்பரம் செய்துவிட்டு சிகரெட் விற்பனையை நிறுத்தவில்லையே, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தடை செய்தால், அதில் நடிப்பதும் நிறுத்தபடும். அதுபோல் ஆன்லைன் ரம்மி விளையாட்டை முற்றிலுமாக தடை செய்தால் அதில் நடிப்பதை நிறுத்திவிடுவேன்” என கூறினார்.
 
பொன்னியின் செல்வம் படத்தில் ராஜராஜ சோழன் ஹிந்து மன்னனாக காட்சிப்படுத்தப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த அவர், படத்தின் இயக்குனரிடம்தான் இந்த கேள்வியை கேட்கவேண்டும் எனவும் இது சுதந்திரநாடு, யாருக்கும் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்யும் உரிமை உண்டு என தெரிவித்தார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...