அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

“என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன்

Posted : புதன்கிழமை,   ஜுலை   28 , 2021  21:34:52 IST

"என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி" என கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 
சினிமா சீர்திருத்த சட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு சினிமா பிரபலங்கள் உள்பட பலரையும் அழைத்து கருத்துக் கேட்டு வருகிறது. இது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ள கமல்ஹாசன் உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லியில் நடந்த இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “என்னுடைய கருத்து என்னவாக இருக்கும் என தெரிந்தும் இந்த கூட்டத்திற்குக் கருத்து தெரிவிக்க எனக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசுக்கு நன்றி.  டெல்லியில் நடந்த சினிமா சீர்திருத்த சட்டம் குறித்த மனு பற்றி வெளியே செல்ல அனுமதி இல்லை. தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டு வருகிறது”என்றவர், சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டிருப்பது தனக்கு வழங்கப்பட்டிருப்பது போன்று என்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...