அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நான் பதவி விலக தயாராக உள்ளேன்: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   23 , 2022  06:47:44 IST

சிவசேனா கட்சியை சேர்ந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். அதனால், மகாராஷ்டிராவில் ஆளும் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினா செய்வார் என்று செய்திகள் வெளிவந்தன.
 
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ‘நான் முதல்வராக தொடர்வதை விரும்பவில்லையென்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் என்னிடம் சொல்லியிருந்தால் நான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கு தயாராக உள்ளேன். சிவசேனா கட்சித் தொண்டர்கள் நான் தலைவர் பதவிக்கு தகுதியில்லை என்று கருதினால் கட்சித் தலைவர் பதவியையும் விட்டுத் விலகுவதற்கு தயாராக உள்ளேன். எதற்காக சூரத்திலிருந்தோ வேறு எங்கிருந்தோ இதுகுறித்து பேசவேண்டும். நேரடியாக என்னிடம் வந்து என்னுடைய முகத்தைப் பார்த்து நான் சிவசேனா கட்சித் தலைவர் பதவிக்கும், முதல்வர் பதவிக்கும் தகுயில்லை என்று கூறலாம்.
 
நான் உடனடியாக பதவி விலகுவேன். நான் என்னுடைய பதவி விலகல் கடிதத்தைத் தயாராக வைத்திருப்பேன். நீங்கள் வந்து அதை எடுத்துக் கொண்டு ராஜ் பவனுக்கு செல்லலாம். என்னைத் தொடர்ந்து சிவசேனா தொண்டர்கள் முதல்வரானால் நான் சந்தோஷப்படுவேன். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதால் அனுபவில்லாவிட்டாலும் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன். கமல்நாத்தும், சரத் பவாரும் என்னை அழைத்து நம்பிக்கையுடன் இருக்கச் சொன்னார்கள். ஆனால், என் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு நான் தேவைப்படவில்லை.
 
ஆனால், என்னுடைய முகத்துக்கு நேராக என்னுடைய எம்.எல்.ஏக்கள் யாரும் இதைச் சொல்லவில்லை. என்னிடம் யாராவது வந்து கூறினால் நான் என்னுடைய பதவி விலகல் கடிதத்தை அளிப்பேன். நான் என்னுடைய பதவி விலகல் கடிதத்தை தயாராக வைத்துள்ளேன். வெளிமாநிலங்களில் சென்று தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் வந்து அந்தக் கடிதத்தை எடுத்து ஆளுநரிடம் கொண்டு கொடுக்கலாம். என்னால் போக முடியாது. எனக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. சிவசேனா தலைவர் பதவியிலிருந்தும் விலகத் தயாராக உள்ளேன்.
 
ஆனால், இதனை ட்விட்டரில் தெரிவிக்காதீர்கள். நான் சில விவகாரங்கள் குறித்து உங்களிடம் பேசவேண்டும். நான் ஏன் மக்களைச் சந்திக்கவில்லை என்று சிலர் கேட்கின்றனர். நம்முடைய இந்துத்துவா குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சிவசேனா மற்றும் இந்துத்துவா ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஆதித்ய தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே மற்றும் நம்முடைய தலைவர்கள் ஆயோத்யாவுக்கு சென்று பார்வையிட்டனர்.
 
இது பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனா இல்லையென்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். தாக்கரேவின் சில கருத்துகளை நாங்கள் எடுத்துக்கொண்டுள்ளோம். இந்துத்துவாவுக்கு சிவசேனா நிறைய செய்துள்ளது. நாங்கள் அதே சிந்தனையை முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...