???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம்: அனுமதியளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

Posted : புதன்கிழமை,   ஜுன்   12 , 2019  00:07:06 IST

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்த அனுமதியளிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை, மனித சங்கிலி போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி லெனின் என்பவர் மனு அளித்தார். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், போராட்டத்துக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, போராட்டம் நடைபெற இருப்பது 600 கிலோ மீட்டர் தூரம் என்பதால், போதிய பாதுகாப்பு வழங்க இயலாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, போராட்டம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்றும், மனித சங்கிலி போன்ற அமைதியான போராட்டதுக்கு அனுமதியளிக்கலாம் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, வரும் 23-ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...