???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாபெரும் பேரணி : காவிரிப்படுகைப் பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவிப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   05 , 2019  03:58:36 IST


Andhimazhai Image

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது எனவும், காவிரி டெல்டாவை 'வேளாண் மண்டலமாக' அறிவித்து அதனை பாதுகாக்கவும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி ஜுலை 9ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்த காவிரிப்படுகைப் பாதுகாப்பு கூட்டியக்கம் திட்டமிட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

அறிக்கை பின்வருமாறு:

 

தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல்கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி ஜுலை 9ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. 

 

 

காவிரி படுகை கூட்டியக்கத்தின் சார்பில் ஜுலை 2ந் தேதி தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து இப்பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அதன் அடிப்படையில் தி.மு.க உறுப்பினர்களால் இப்பிரச்சனை சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. ஜுலை 3ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் இப்பிரச்சனை தொடர்பாக தமிழக அரசின் நிலை என்ன என்பதை தமிழக சட்ட அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் எங்கேயும், எப்போதும், ஆய்வுக்கு உட்பட தமிழக அரசு அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளதை காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் வரவேற்கிறது. தமிழக அரசின் இந்த அணுகுமுறையை வரவேற்கும் வகையில் 9ந் தேதி அறிவித்திருந்த பேரணி ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

 

அதே நேரத்தில், கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். 

 

 

1.   காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

 

2.   அமைச்சர் அறிவித்த அடிப்படையில், உடனடியாக அரசாணை வெளியிடப்பட வேண்டும். 

 

3.   இத்திட்டங்களை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள், விவசாயிகள், அமைப்பினுடைய நிர்வாகிகள் என பல ஆயிரக்கணக்கானோர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். 

 

4.    ஆய்வுக்கு உட்பட அரசு அனுமதிக்காது என அறிவித்திருப்பதால் மேற்படி திட்டப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து இயந்திரங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

 

மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவதன் மூலம் மக்களிடம் காவிரி டெல்டா பாதுகாக்கப்படும் என்ற முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். தமிழக அரசு மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். இல்லையென்றால், காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் கூடி அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைக்கு திட்டமிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கெள்கிறோம்.

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...