???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் 0 லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Posted : புதன்கிழமை,   ஜனவரி   22 , 2020  21:23:33 IST

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் 28-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'எவ்வித அனுமதியும் பெறாமல், சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு உட்படாமல் இதற்கு முன் இருந்த எந்த மத்திய அரசும், இப்படி சர்வாதிகாரமாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களை, விவசாய நிலங்களை அழித்து நிறைவேற்றிட எண்ணியதில்லை. ஆனால் தமிழக உரிமைகளுக்கும் விவசாயிகளின் நலன்களுக்கும் முற்றிலும் விரோதமாக மத்திய பா.ஜ.க. அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டு, தமிழகத்தில் உள்ள வேளாண் பகுதிகளை பாலைவனமாக திட்டமிட்டு மாற்றிடத் துணிந்துள்ளது.

எனவே, மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் மாநில அ.தி.மு.க. அரசின் விவசாயிகள், வெகுமக்கள் விரோத செயல்களை கண்டித்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி, மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் திரும்பப் பெற்று, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்றும், 28-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டத்தலைநகரங்களில், தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...