???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   20 , 2018  00:21:45 IST

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாலாகுடாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரனாய் மீது அவருடைய மனைவி அமிர்தவர்ஷினியின் தந்தை மாருதிராவ் கூலிப்படையை ஏவி அவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் 2 நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் மீண்டும் அதே போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர் நகர் பகுதியை சேர்ந்த மாதவி, சந்திப் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மாதவி மீது அவருடைய தந்தை மனோகர் ஆச்சாரி கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
 
மாதவி மற்றும் சந்திப் இருவரும் எஸ்.ஆர் நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எர்ரகட்டா பகுதியில் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மனோகர் ஆச்சாரி மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து இரண்டு பேரையும் ஓட ஓட விரட்டி வெட்டினார். சம்பவத்தில் இரண்டு பேரும் படுகாயமடைந்து நிலைகுலைந்து விழுந்தனர். அவர்களை பொதுமக்கள் அருகிலுள்ள நீலிமா மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...