ஹைதரபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 80 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர், 4) காலை 8 மணியளவில் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி 80 இடங்களிலும், தெலங்கான ராஷ்டிரிய சமிதி 25 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.