???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்!- மருத்துவர் இராமதாசு 0 கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் 800க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் 0 கிரீமிலேயர் முறையை முற்றாகக் கைவிடுக!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 0 தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா? -முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி 0 எட்டு போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம்: உ.பி, ரவுடி விகாஸ் துபே கைது! 0 சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் 0 ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்கள் நீக்கம்! 0 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் 0 தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மனைவிக்கு முத்தம் கொடுக்கும்போது நாக்கு ஒட்டிகிச்சு.. அதனால் வெட்டிட்டேன்: அதிர்ச்சியூட்டிய கணவர்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   16 , 2019  06:14:09 IST


Andhimazhai Image
மனைவியின் நாக்கை துண்டித்ததற்காகக் கைதாகி இருக்கிறார் ஒருவர். அவர் சொன்ன காரணம் அதிர்ச்சியூட்டுவது.  மனைவியை தான் முத்தமிட்டபோது அவருடைய நாக்குடன் தன் நாக்கு ஒட்டிக்கொண்டுவிட்டதாகவும் அதைப் பிரிப்பதற்காக கத்தியால் மனைவியின் நாக்கை வெட்டியதாக அவர் சொல்லி இருக்கிறார்.
 
அஹமதாபாத் ஜுஹாபுராவில் வசிப்பவர் அய்யூப் மன்சூரி. கடந்த வாரம் (அக்டோபர் 9) இவரது மனைவி தஸ்லீமின் நாக்கு துண்டானது. முத்தமிடும்போது இருவரது நாக்கும் சிக்கிக்கொண்டதால், அதை விடுவிக்கும்போது துண்டாகிவிட்டதாக அய்யூப் மன்சூரி போலீஸாரிடம் கூறினார். இப்படி நாக்குகள் ஒட்டிக்கொண்டதால் பதட்டமடைந்த அவர் நாக்கை துண்டித்துவிட்டு, மனைவியின் வாயில் ரத்தம் வழியவே அவரை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு ஓடிவிட்டார்.
 
மன்சூரிக்கு தஸ்லீம் மூன்றாவது மனைவி.  ஏற்கனவே மன்சூரி தனது முதல் மனைவியை எரித்து கொன்றதாக குற்றச்சாட்டு இருக்கிறது. பின்னர் இரண்டாவது மனைவியையும் அடித்து துன்புறுத்தியதால் அவரும் விலகிச்சென்றார்.
 
பின்னர், தஸ்லீமை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட மன்சூரி இவரையும் அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார். இப்போது தஸ்லீமின் நாக்கையே அவர் வெட்டியிருக்கிறார். இப்போது பேச முடியாமல் இருக்கும் தஸ்லீம், திரவு உணவை மட்டும் தான் சாப்பிட முடிவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் மன்சூரி, நீதிமன்ற காவலில் சபரிமதி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.  


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...