???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எங்கள் ராணுவத்தை அசைக்க முடியாது: சீனா மீண்டும் மிரட்டல் 0 கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் குஜராத் 0 ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம் 0 இங்கிலாந்தில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை : தண்ணீரில் மின்சாரம் தயாரிக்கத் திட்டம் 0 பள்ளிகள், கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாடவேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு 0 ஆவணப்பட இயக்குநர் திவ்யா பாரதி கைது: 0 இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த் 0 தமிழக அரசு பாஜகவின் ஜெராக்ஸ்: கி.வீரமணி தாக்கு 0 சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை 0 ஓபிஎஸ் கிணறு விவகாரம்: போராட கிராம மக்கள் முடிவு 0 கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம்! 0 மோடியுடன் ஓ.ப‌ன்னீர்செல்வ‌ம் சந்திப்பு 0 மக்களவையில் அமளி: 5 காங். எம்பிக்கள் இடைநீக்கம் 0 குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கிறார்! 0 போதைபொருள் வழக்கில் காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எதையும் எதிர்பாராமல் உதவி செய்யுங்கள்!- ஹரிக்கேன் வெட்ஸ் விழாவில் சிலம்பொலி செல்லப்பன் வேண்டுகோள்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   19 , 2016  06:06:32 IST


Andhimazhai Image

''உதவி செய்யுங்கள். ஆனால்  உங்களிடம் உதவி பெற்றவர்கள் அதைத் திருப்பிச் செய்யவேண்டும். நன்றியுடன் இருக்கவேண்டும் என்ற எதிர்ப்பார்க்காதீர்கள்’’ என்று கூறினார்  தமிழக அரசின்  தமிழ்வளர்ச்சித்துறை முன்னாள் இயக்குநர் முனைவர் சிலம்பொலி செல்லப்பன். ஹரிக்கேன் வெட்ஸ் உதவி அறக்கட்டளை என்ற கால்நடை மருத்துவர்களின் அமைப்பு தன்னுடைய முதலாம் ஆண்டு நிறைவை சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் கொண்டாடியது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்  சிலம்பொலி செல்லப்பன் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசியதாவது:

 

"எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை அண்ணாநகரில் இரண்டரை ஏக்கர் நிலம் கிடைத்தது. அதை நான் என்ன செய்யப்போகிறேன் என்று நண்பர் ஒருவருக்கு இலவசமாக அளித்தேன். அவர் பல லாரிகளுக்கு அதிபர்.  அவரிடம் ஒருமுறை வீடு காலி செய்யப்போகிறேன் சொல்லிக்கொண்டிருந்தேன்.  அவரிடம் லாரி வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை. ஆனால் அவரோ என்னிடம் இருக்கும் லாரிகள் எல்லாம் வெளியே போய்விட்டன என்று கூறிவிட்டார்.  இன்றைக்கு அந்த இரண்டரை ஏக்கர் நிலத்தின் மதிப்பு உங்களுக்கே தெரியும்.

 

 

ஆனாலும் இலவசமாகவே அதைப்பெற்றவர் எனக்கு அளித்த பதில் அதுதான். ஆகவே தான் சொல்கிறேன். இந்த அறக்கட்டளையை உருவாக்கி இருக்கும் நீங்கள் சிறந்த உதவிகளைச் செய்யுங்கள் அதே சமயம் உங்களால் பயன்பெற்றவர்கள் உங்களுக்குத் திருப்பிச்செய்யவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்’’

 

தன்னுடைய உரையில் சிலப்பொலி செல்லப்பன் கால்நடை மருத்துவக்கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களின்  படிப்புச் செலவுக்கு இந்த அறக்கட்டளை  உதவிசெய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

 

இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சமுக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம் அழைக்கப்பட்டிருந்தார். தன்னுடைய ஓய்வூதியத்தை சமூகத்துக்காக அளித்தவர். அமெரிக்க அரசின் முப்பது கோடியை நன்கொடையாக அளித்துவிட்டு யாரிடமும் அதைப்பற்றி பேசாமல் இருந்த பெருந்தகையாளர் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது பார்வையாளர்களை நெகிழ வைத்தது. ‘’ தினமும் யாருக்காவது உதவி செய்யுங்கள்; உதவி என்பது பொருளாக பணமாகத்தான் இருக்கவேண்டியது இல்லை.  பொருள் இல்லை என்பது உதவி செய்யத்தடை இல்லை. தினமும் ஏதாவது ஒரு உயிருக்கு மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளாகவும்  இருக்கலாம் .உதவி செய்யவேண்டும் என்பதே முக்கியம் ’’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

விழாவில் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்  பதிவாளர் முனைவர் பெரு.மதியழகன் உரையாற்றினார். அப்போது மாசே இல்லாத சு.செ!  என்ற தலைப்பில் அவர் சிலம்பொலி செல்லப்பன் பற்றி வாசித்த கவிதை அனைவரையும் கவர்ந்தது. அத்துடன் இன்பம், மகிழ்ச்சி,ஆனந்தம் ஆகிய சொற்களுக்கான தனித்தனிப் பொருட்களை இலக்கிய நயத்துடன் விளக்கினார்.

 

 

‘’கால்நடை மருத்துவர்களை மட்டும் நாங்கள் உருவாக்கவில்லை. நல்ல குடிமக்களையும் நல்ல மனம் கொண்ட மனிதர்களையும் நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்’’ என்று பெருமைப்பட்டுக்கொண்டார் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட கால்நடை மருத்துவக்கல்லூரி துணைவேந்தர் முனைவர் சு.திலகர்.

 

1988-89 ஆம் ஆண்டு கால்நடை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களால்  2015-ல் உருவாக்கப்பட்டது இந்த ஹரிக்கேன் வெட்ஸ் அறக்கட்டளை. வெள்ள நிவாரணம், கணினிக்கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் இது உதவிகளை ஆற்றி உள்ளது.

 

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...