???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஹரிக்கேன் வெட்ஸ் அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   27 , 2018  06:35:52 IST


Andhimazhai Image

 

 

சென்னை, 27-10-2018: சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படிக்க சேர்ந்த மாணவர்கள் (1988) ஒன்று சேர்ந்து உருவாக்கி இருக்கும் தொண்டு நிறுவனம் ஹரிக்கேன் வெட்ஸ் . இதன் மூன்றாவது ஆண்டு விழா இன்று (சனிக்கிழமை, 27-10-2018) கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.பாலசந்திரன், பல்கலைக்கழகப் பதிவாளர் டென்சிங் ஞானராஜ் ஆகியோருடன் கவிஞர் அ.வெண்ணிலா, கில்ட் ஆப் சர்வீஸ் அமைப்பின் இணைச்செயலாளர் மாயா நாயர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, புதுடெல்லி உள்ளிட்ட இடங்களில் கடந்த மூன்றாண்டுகளில் 26 நலப்பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது. கடலூரில் வெள்ள நிவாரணம், ஒக்கி புயல் நிவாரணம், சமீபத்திய கேரள வெள்ள நிவாரணப்பணிகள் ஆகியவையும் இந்தப் பணிகளில் அடங்கும். இன்னும் அதிகமான நலப்பணிகளைச் செய்ய தேவையான நிதிகளைத் திரட்டி வருவதாக இந்த அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்வில் தெரிவித்தனர்.

 

வாழ்த்திப்பேசிய துணைவேந்தர் சி பாலசந்திரன், “ நம் நாட்டு மருத்துவத்தை மாற்று மருத்துவம் என்கிறோம். வெளியில் இருந்துவந்த நவீன மருத்துவத்தைத்தான் மருத்துவமாக ஏற்றுக்கொள்கிறோம். இது ஒரு முரண். இப்போது கால்நடை மருத்துவத்துறையிலும் நம்நாட்டு மருத்துவ வழிமுறைகளைச் சேர்த்திருக்கிறோம்” என்று கால்நடை மருத்துவர்களின் பங்களிப்பு பற்றிப் பேசியவர்,’’ஏற்கனவே வெற்றி என்ற பெயரில் இன்னொரு கால்நடை மருத்துவ முன்னாள் மாணவர்களின் சேவை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இப்போது அதைத் தொடர்ந்து ஒரு ஹரிக்கேன்(புயல்) புறப்பட்டுள்ளது” என்று அட்டகாசமாக ஒரு பஞ்ச் வைத்து வாழ்த்தினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் அ. வெண்ணிலா, “ சேவை என்பது கையில் இருப்பதைப் பிறருக்குக் கொடுப்பது மட்டுமல்ல, தங்களை பிறருக்காக அர்ப்பணித்துக்கொள்வதும் ஆகும். காந்தி, பெரியார், சுபாஷ் சந்திரபோஸ், அன்னை தெரசா போன்றோரின் சேவை மனப்பான்மையை அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மையின் சேவை மனப்பான்மைதான் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளுக்கே வழிகாட்டியாக அமைந்தது.” என்றார். அத்துடன்,” பல அரசுப்பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்துதரப்பட்டுள்ளது. ஆனால் பல பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லாததால் அவை மூடப்பட்டுள்ளன. எனவே பல்வேறு சேவைகளை மேற்கொள்ளும் ஹரிக்கேன் வெட்ஸ் அமைப்பினர் அரசுப்பள்ளிகளில் முடிந்த அளவுக்கு நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியையும் மேற்கொள்ளவேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

 

“தமிழ் மக்களுக்கும் விலங்குகளுக்குமான உறவு சங்ககாலத்தில் இருந்தே பதிவாகி உள்ளது. கிபி ஏழாம் நூற்றாண்டில் சாத்தனூர் அருகே நிறுவப்பட்ட ஒரு நடுகல்லில் ஒரு வீரனின் உருவமும் அவனுக்கு அருகே ஒரு வேட்டை நாயின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடிய கல்வெட்டில் கள்வர்களுடன் மோதி இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு அந்த வீரன் பெயரைக் குறிப்பிடாமல் கோவன் என்று நாயின் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். அந்த அளவுக்கு நேசிக்கப்பட்ட விலங்குகளுக்கு சேவை செய்யும் கால்நடைமருத்துவர்களாகிய நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்” என்றார் வெண்ணிலா.

 

நிகழ்ச்சியில அடுத்ததாக வாழ்த்திப் பேசிய மாயா நாயர் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்காக பள்ளி நடத்தும் தன் சேவை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “ போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் பாடம் எடுத்தேன். அப்போது நாற்காலியில் அமராமல் அக்குழந்தைகளுக்கு  சமமாக மனைக்கட்டையில் அமர்ந்து சொல்லித்தந்தேன். இப்போது அதிர்ஷ்டவசமாக போலியோ பாதிப்பு குறைந்துவிட்டது. ஆனால் கைகால் இழந்தவர்கள், தசை, எலும்பு பலவீனம் கொண்ட குழந்தைகள் எங்கள் பள்ளியில் படித்துவருகின்றனர். அவர்களுக்கு சேவை செய்வதில் என் முகம் மலர்கிறது. நான் கடந்த பத்து ஆண்டுகளாக புற்றுநோயை எதிர்கொண்டு வாழ்ந்துவருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இனி பயனில்லை என்று மருத்துவர்கள் கைவிட்டனர். ஆனால் இதோ உங்கள் முன்பு நலமாக நிற்கிறேன். குழந்தைகளுக்கான சேவையில் மனம் நிரம்புவதால்தான் புற்றுநோயை எதிர்த்துப் போராடமுடிகிறது” என்றவர் தொடர்ந்து விரிவாக நலப்பணிகளைச் செய்யுமாறு அமைப்பினரைக் கேட்டுக்கொண்டார்.

 

நிகழ்வில் மருத்துவர் ஏகே செந்தில்குமார் வரவேற்புரை வழங்க, இறுதியில் மருத்துவர் நிஷா நன்றியுரை வழங்கினார். நிறுவனர் கோ.ப.ஆனந்த் அறிமுக உரை வழங்கினார். மருத்துவர் விஜில் அன்பையா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட நலப்பணிகளைத் தொகுத்துரைத்தார். மருத்துவர் மாரியப்பன் அமைப்பின் எதிர்காலத்திட்டங்களைப் பற்றி விளங்கினார். மருத்துவர் ரஜீனா நிகழ்வை நெறியாள்கை செய்தார். சிறப்பாக சேவைப் பணிபுரிந்த  உறுப்பினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...