???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சுகாதாரத்தில் பின்னுக்குச் சென்ற தமிழகம்! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு 0 குடிகாரர்களால் மனைவி உயிரிழப்பு: 6 மணி நேரம் போராடிய மருத்துவர் 0 தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்: ஸ்டாலின் 0 திருமணம் ஆகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது: நீதிமன்றம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   03 , 2013  22:19:54 IST

இலங்கை இறுதிப் போரில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தது இலங்கை அரசு. இலங்கை அரசின் இந்த போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வருகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா ஒரு கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்தது. இந்தியா உள்பட பெரும்பான்மையான நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.

 

இந்த தீர்மானம் இலங்கைக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக் கூட்டத்திலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறது. இன்று தாக்கல் ஆகும் இத் தீர்மானத்தில், இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், போர்ப்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், கடமையை நிறைவேற்றுவதில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தப்ட இருக்கிறது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. இவற்றில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கின்றன. மேலும் இது குறித்து இந்திய அரசு இன்னமும் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...