???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம் 0 FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்! 0 அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை 0 உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவர் மருத்துவமனையில்! 0 சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு 0 திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு 0 அதிமுக வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வெளியீடு! 0 சச்சினுக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியர் 0 ஃபாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் 0 உள்ளாட்சி தேர்தல்: தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் 0 ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி 0 கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு 0 மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு! 0 தமிழ்ப் படங்களில் பிகில் வசூல் சாதனை! 0 வடகிழக்கு மாநிலங்கள் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்: இந்திய ராணுவம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மனைவி ரித்திக் ரோஷனின் தீவிர ரசிகை - பொறாமையில் கொலை செய்த கணவன்

Posted : புதன்கிழமை,   நவம்பர்   13 , 2019  06:54:17 IST


Andhimazhai Image
தனது மனைவி ரித்திக் ரோஷனின் ரசிகையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத கணவர், அவரை குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள குயின்ஸ் குடியிருப்பில் நடந்துள்ளது.
 
இந்திய தம்பதியான  தினேஷ்வர் புத்திதத் - டான் டோஜாய் ஆகியோருக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைப்பெற்றது. இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். தினேஷ்வரின் மனைவி டான் டோஜாய்,  பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார்.
 
மனைவி எப்போதும் ரித்திக் ரோஷனின் படங்களை பார்ப்பது, பாடல்களை கேட்பது தினேஷ்வருக்கு பிடிக்காமல் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மனைவி டான் டோஜாயை கத்தியால் குத்திக் கொலை செய்த தினேஷ்வர், அவரது தங்கையிடன் உனது சகோதரியை கொலை செய்துவிட்டேன் என கூறி வீட்டின் சாவி இருக்குமிடத்தை கூறியுள்ளார். பின்னர் தினேஷ்வரும் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் சென்று பார்த்தபோது டான் டோஜாய் கத்திக்குத்துடன் இறந்துகிடந்திருக்கிறார்.
 
இதுதொடர்பான விசாரணையில், தனது கணவருக்கு தான் ரித்திக் ரோஷனின் படங்களை பார்ப்பதும், பாடல்களை கேட்பதும் பிடிக்கவில்லை என டோஜாய் கூறியதாக அவருடன் வேலைபார்க்கும் மாலா ராம்தானி தெரிவித்துள்ளார்.
 
ஜூலையில் இருவருக்கும் திருமணம் நடந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதமே டான் டோஜாயை தினேஷ்வர் புத்திதத் தாக்கியுள்ளார். இதுதொடர்பில் டான் டோஜாய் நீதிமன்றம் சென்று பாதுகாப்பு கோரியிருக்கிறார். எனினும், தினேஷ்வர் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு விபரீதம் ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து டோஜாயின் தோழி ரோட்னி கூறும்போது, ”தினேஷ்வர் டோஜாயை மிகவும் நேசித்தார். அன்புடன் நடந்துகொண்டார். எனினும், டோஜாயின் வேலை அவரது கணவருக்கு பிடிக்கவில்லை. டோஜாய் அழகாக இருந்தது, நிறைய சம்பாதித்தது அவருக்கு பொறாமையை ஏற்படுத்தியது. தனது கணவர் அடிப்பது குறித்து, கொலை மிரட்டல் விடுப்பது குறித்தும் டோஜாய் பலமுறை சொல்லியிருக்கிறார்” என்றார். டான் டோஜாயின் இந்த படுகொலை அவரது உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...