???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2020  21:54:18 IST

தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை என்ற அமைப்பின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் விஸ்வ ரத்தினம் என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில்,' கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக தொழில்கள் முடங்கி வாழ்வாதாரம் இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இ-பாஸ் அவசியம் இல்லை என தெரிவித்த நிலையில் தமிழக அரசு இன்னமும் இ-பாஸ் திட்டத்தை தொடர்ந்து வருகிறது.

இ-பாஸ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. இ-பாஸ் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் தொழில் செய்து வந்த இடங்களுக்கு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் வயதான பெற்றோரை நேரில் சென்று பார்க்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி பயில இருக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்து நேரடியாக சென்று பார்க்க முடியாத நிலையும் இருந்து வருகிறது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான தனி மனித உரிமையை இ-பாஸ் திட்டம் தடுத்து வருகிறது.

இதுபோன்ற செயல், மனித உரிமை மீறல் என்பதால் இ-பாஸ் திட்டத்தை ரத்து செய்து பொதுமக்கள் சுதந்திரமாக சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன், தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் 4 வாரத்தில் தனது விளக்கத்தை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...