???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது 0 நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது எப்படி? -விளக்குகிறார் உஷா ராஜ நந்தினி!

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   09 , 2019  03:21:43 IST


Andhimazhai Image

கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. புவிசார் குறியீட்டை பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் தொழிநுட்ப (Bio Technology) துறை. அத்துறையின் தலைவர் முனைவர் உஷா ராஜ நந்தினியிடம் இது குறித்து உரையாடினோம்.

 

”  14-ஆம் நூற்றாண்டிலிருந்தே இங்கு மலைப்பூண்டு விளைவிக்கப்படுகிறது. நாம் உணவில் பயன்படுத்தும் சாதாரண பூண்டுக்கும் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த பூண்டில் ஒரு பல்லின் சிறிய துண்டைக்கூட நம்மால் அப்படியே சாப்பிட முடியாது. அவ்வளவு சாரம்கொண்ட பூண்டு வகை இது,” என்று சுவாரசியமாக ஆரம்பித்தார் உஷா ராஜ நந்தினி.

 

”அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் உயிரியல் தொழில்நுட்ப துறையில் பாடதிட்டத்துக்கு அப்பால் பல முன்னெடுப்புகளையும், ஆய்வுகளையும் செய்து வருகிறோம். அதனொரு பகுதியாகதான் கொடைக்கானலின் சூழலியல், இங்கு விளைவிக்கப்படும் பொருட்களின் தனித்தன்மை போன்றவற்றில் நாங்கள் கவனம் செலுத்தினோம். இந்த ஆய்வில் எங்களுக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்தன

 

உணவைவிட இந்த பூண்டு மருத்துவ தேவைகளுக்குதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் இதற்கு இருக்கின்றன. தலை வலி, உடல் வலி, காய்ச்சல் என்று எல்லாவற்றுக்கும் இதை மருந்தாக பயன்படுத்துகிறார்கள். மலைப்பூண்டிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை லேகியம் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு சிறந்த மருந்தாக இங்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சிறப்பும், தனித்தன்மையும்கொண்ட கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு பெறுவது என நாங்கள் முடிவெடுத்தோம். எங்கள் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் வள்ளி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தை சேந்த டாக்டர் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் மலைப்பூண்டு குறித்து உரையாடியபோது அவர்கள் தான் புவிசார் குறியீட்டின் தேவையை உணர்த்தினார்கள்.

 

புவிசார் குறியீடு பெற வேண்டுமென்றால் மலைப்பூண்டுக்கு 100 வருட பாரம்பரியம் இருக்கிறது என்பதை சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும். எனவே அதற்கான சான்றுகளை தேடும் வேலைகளில் இறங்கினேன்.  மலைப்பூண்டு விளைவிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் உரையாடுவது, கையெழுத்து வாங்குவது போன்ற பணிகளை செய்தேன். ) திரட்டிய ஆவணங்களை சென்னையில் உள்ள காப்புரிமை தகவல் மையத்தில் (Patent information centre,) பதிவு செய்து   புவிசார் குறியீடு பெறும்வரை அதன் நிலவரத்தை பின்தொடர்ந்தவர் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தை சேந்த ஸ்ரீனிவாசன்.

 

 

 

கொடைக்கானல் மலைப்பூண்டு பற்றி தொடர்ந்து ஆய்வு செய்தபோது, 1837-ல் Madras journal of literature and science -இல் வெளியான முக்கிய தரவுகள் எங்களுக்கு கிடைத்தன. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் வாழ இயலுமா என்பதை தெரிந்துகொள்ள நடத்தப்பட்ட ஆய்வில், கொடைக்கானலில் அதிகமாக பூண்டு விவசாயம் செய்யப்பட்டது பற்றிய தகவல்கள் இருந்தன.

 

கொடைக்கானல் மலைப்பூண்டின் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள மற்றொரு விஷயம் எங்களுக்கு உதவியாக இருந்தது. இங்கு இருக்கும் பழமையான வீடுகளில் மலைப்பூண்டை பதப்படுத்தி வைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் இருப்பதை நாங்கள் அறிந்தோம். வீட்டின் உட்புறத்தில் பல அடுக்குகளாக அமைக்கப்பட்ட பகுதியில் நீண்ட காலத்துக்கு பதப்படுத்தி வைத்து மலைப்பூண்டு சேமிக்கப்பட்டிருக்கிறது.

 

புவிசார் குறியீடு பெறும் பணியின்போதே கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு இலச்சினையும் (Logo) பதிவு செய்துவிட்டோம். இதன்மூலம் கொடைக்கானல் மலைப்பூண்டு அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. கலப்படம், போலிகளைக் களைய இந்த லோகோ உதவும்.

 

 இத்தகைய சிறப்புமிக்க பொருளை உற்பத்தி செய்தும், உரிய விலை கிடைக்காமல் பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டமுடியாதவர்களாக இந்த விவசாயிகள் பலகாலம் இருந்தனர். ஆனால், கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் எனும் அளவில் விற்ற மலைப்பூண்டு இந்த புவிசார் குறியீடு வாங்கும் செய்தி பரவியபோது 200 - 300 என நல்ல விலைக்கு உயர்ந்தது. இது இன்னும் உயர்ந்து அவர்களுக்கு உதவக்கூடும். சங்கத்தின் மூலம் அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து உற்பத்தி, சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டால் அவர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்.

 

புவிசார் குறியீடு கிடைத்த மகிழ்ச்சியில் 73 வயதான விவசாயி ஒருவர் என்னிடம் பேசினார். 'மலைப்பூண்டு இருக்கும் வரை உங்களது நினைவும் இருக்கும் அம்மா' என அவர் கூறியது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது’’ என்கிறார் உஷா.

 

உஷா ராஜ நந்தினி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கவரக்குளத்தைச் சேர்ந்தவர். விலங்கியல் இளங்கலைப் படிக்கும்போதே திருமணம் ஆகிவிட்டது. அதன் பின்னர் தொடர்ந்து முதுகலை, பிஎச்டி பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். “கணவர் வழக்கறிஞர். அவருடைய ஊக்கத்தால்தான் மேற்படிப்புகளை முடித்தேன்,” என்கிற இவருக்கு இரு ஆண் குழந்தைகள். மூத்த மகன் மருத்துவம் படிக்கிறார். இளையவர் இப்போது பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்.

 

இவரது ஆர்வமான செயல்பாடுகளைக் கண்ட அன்னை தெரசா பல்கலைக் கழகம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பயிற்சி மையம் ஒன்றை உருவாக்கி அதன் ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்துள்ளது.

 

-      செய்தியாளர் வாசுகி உதவியுடன் வசந்தன்

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...