???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என்ன தைரியம் உங்களுக்கு? உலக தலைவர்களை விளாசிய சிறுமி

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   24 , 2019  05:43:09 IST


Andhimazhai Image

உலக தலைவர்களை பார்த்து சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளார் 16 வயதேயான கிரெட்டா தன்பெர்க்.

 

ஐ.நா.வில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய இவர் உலக நாடுகளின் தலைவர்களை பார்த்து ’how dare you' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மாநாட்டில் அவர் பேசியதாவது:

 

உலகின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பும் சரிந்து கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் அழிவின்  தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் அதற்கு தீர்வு காணாமல் பொருளாதார வளர்ச்சி பற்றிய கற்பனை கதைகளை பேசிக் கொண்டிருக்கிறீர்கள். என்ன துணிச்சல் உங்களுக்கு ? பள்ளிக்கு செல்ல வேண்டிய நான் போராடிக்கொண்டிருப்பதற்கு நீங்கள்தான் காரணம். எனது குழந்தைப்பருவத்தையும் திருடிவிட்டீர்கள்.

 

இளையதலைமுறையினர் உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர். வளி மண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை எதிர்கொள்வதில் இளைய தலைமுறையினரை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். மாற்றம் வந்துகொண்டிருக்கிறது. நீங்கள் ஆசைப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.

 

இவ்வாறு அவர் பேசியது ட்விட்டரில் டிரெண்டாகிவருகிறது. #howdareyou என்ற ஹேஷ்டேக் மூலம் பலரும் கிரெட்டா தன்பெர்குக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர் சுவீடன் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...