???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு 0 சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் 0 ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை 0 தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னையில் மழைக்கு வாய்ப்பு 0 காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு! 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரோனாவில் இருந்து சீனா மீண்டது எப்படி?

Posted : சனிக்கிழமை,   மார்ச்   21 , 2020  05:25:54 IST


Andhimazhai Image
முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றிய நாடான சீனா 3245 பேரை இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதல்களுக்குப் பலிகொடுத்துள்ளது. இருப்பினும் 140 கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாடு புதிதாக கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என அறிவித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. இது எப்படி சாத்தியமானது?
 
கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்படும் சீனா, மாவோ காலத்தில் செய்யப்பட்டதைப் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததுதான் இந்த வைரஸ் பரவலைத் தடுத்ததற்குக் காரணம்.  ஆரம்பத்தில் இந்த வைரஸ் பரவலையே ஏற்றுக்கொள்ளாத நாடு அது. இது பற்றி எச்சரித்த மருத்துவரான லி வென்லியாங் மீது நடவடிக்கை எடுத்தது. இந்த மருத்துவர் கொரானாவால் இறந்தது நினைவிருக்கலாம். பின்னர் விழித்துக்கொண்ட சீனா கடந்த டிசம்பரில்தான் கொரானோ என்ற புதிய வைரஸ் தாக்குதலை ஏற்றுக்கொண்டு நடவடிக்கைகளைத் தொடங்கியது.
 
அதே சமயம் வூஹானில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். எல்லா மருத்துவமனை படுக்கைகளிலும் நோயாளிகள். உலக சுகாதார நிறுவன அறிக்கைப்படி நோய்பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சராசரியாக 2.6 பேருக்கு இதைப் பரப்பினர். ஐந்தாறு நாட்களில் ஒரு நோய்த் தொற்றாளர் மூலமாக 3500 பேருக்குமேல் இது பரவி இருந்தது.  சீனா இந்த பரவலைத் தடுத்தது. எப்படி?
 
வரலாற்றில் இல்லாத படி, மிகக்கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதை கொடுரமான, ஜனநாயகமற்ற, சர்வாதிகாரமான கட்டுப்பாடுகள் என்றனர். ஆனால் இதைத்தான் ஐரோப்பாவும் அமெரிக்காவும் இப்போது கடைப்பிடிக்கின்றனர். முழுமையான அடைப்பு. மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல். நகரங்களை, கிராமங்களை, குடும்பங்களை தனி மனிதர்களைத் தனிமைப்படுத்துதல். தனி மனித உரிமையா பொது நலமா என்று பார்த்தால் பொதுநலனே முக்கியம் என முடிவெடுக்கப்பட்டது.  சீனாவில் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.  போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள் வீடுகளில் அடைபட்டனர். இதன் மூலம் வைரஸ் பரவும் வேகம் குறைந்தது. லட்சக்கணக்கில் ஆகியிருக்கவேண்டிய நோய்த்தொற்றும் ஆயிரக்கணக்கான மரணங்களும் தடுக்கப்பட்டன. மருத்துவமனைகள் தயாராவதற்கான போதுமான நேரமும் கிடைத்தது.
 
இதைத்தான் நாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும். சீனா செய்திருப்பது மிக முக்கியமானது. நாம் அனைவரும் உணரவேண்டியது இதுவே ஆகும். மக்கள் தாங்களே முன்வந்து ஒரு பெரும் வைரஸுக்கும் எதிரான போருக்குத் தயாராகவேண்டிய நேரம் இது. புரிந்துகொள்ளுங்கள்!


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...